Asianet News TamilAsianet News Tamil

சித்திரை திருவிழாவுக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது; 5ம் தேதி ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்

மதுரை சித்திரை திருவிழாவுக்கான முகூர்த்தக்கால் நடும் விழா இன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வருகின்ற மே 5ம் தேதி அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

chithirai thiruvizha festival 2023 mukurthakal planted in madurai keelamasi street
Author
First Published Apr 10, 2023, 12:31 PM IST | Last Updated Apr 10, 2023, 12:31 PM IST

மதுரை சித்திரை திருவிழாவிற்கான முகூர்த்த கால்  நடும்விழா  மதுரை கீழமாசிவீதியில் உள்ள தேரடியில்  பட்டர்கள் சிறப்பு பூஜை செய்து மூகூர்த்த கால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு  தேரடியில் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மீனாட்சி அம்மன் கோவில் துணை ஆணையர் அருணாசலம், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவை தொடர்ந்து கோயிலின் சித்திரை திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் தொடங்க உள்ளன.  

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா - ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளதாக கோவில் நிர்வாகம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து விழாவிற்கான அனைத்து வேலைகளும் மும்முரமாக நடைபெற துவங்கியுள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூர கொலை

இந்தியாவின் புகழ்பெற்ற மிக பழையான கோவில்களில் ஒன்றாக உள்ள மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடக்கும் திருவிழாக்களில் மிக முக்கியமானது சித்திரை திருவிழா. இந்த சித்திரை திருவிழாவானது மதுரை மட்டுமின்றி பல மாவட்ட மக்களும் கொண்டாடும் விழாவாக இருந்து வருகிறது. 15 நாட்கள் திருவிழாவான சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொள்வார்கள். 

இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா பக்தர்கள் அனுமதியுடன் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ள நிலையில் அதற்கான தேதிகள் வெளியாகியுள்ளன.

38 ஆண்களுக்கு பின்னர் ஒன்றிணைந்து ஆசிரியருக்கு நன்றிக்கடன் செலுத்திய முன்னாள் மாணவர்கள்

அதனடிப்படையில் ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றமும், ஏப்ரல் 30ம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மே - 2ம் தேதி  மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், மே 3ம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது. இதேபோன்று கள்ளழகர் கோவிலை பொறுத்தமட்டில் மே 4ம் தேதி இரவு கள்ளழகர் எதிர்சேவையும், மே 5ம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வானது  நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சித்திரை திருவிழாவிற்கான அனைத்து முன்னேற்பாடு வேலைகளையும் கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios