38 ஆண்களுக்கு பின்னர் ஒன்றிணைந்து ஆசிரியருக்கு நன்றிக்கடன் செலுத்திய முன்னாள் மாணவர்கள்
புதுவையில் கடந்த 38 ஆண்டுகளுக்கு முன்னர் 10ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு நடத்தி தங்கள் ஆசிரியருக்கு நன்றிக்கடன் செலுத்தினர்.
பெற்றோரையும், உறவினர்களையும் தாண்டி மாணவர்களுக்கான சமூக உறவை ஏற்படுத்தித் தரும் உன்னத இடம் பள்ளிக்கூடம். இங்கிருந்துதான் சமூகத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து படிக்கவும், படித்தவற்றைக் கொண்டு பக்குவமடையவும், கற்ற கல்வியால் வாழ்க்கையை நன்கு அமைத்துக் கொள்ளவும் கற்றுக்கொள்கிறார்கள்.
மாணவப் பருவத்தில் பள்ளிக் கூடம் கசந்தாலும், படித்து நல்ல நிலைக்குச் செல்ல அச்சாணியாக இருந்தது பள்ளிக்கூடமும் அங்கு கல்வி போதித்த ஆசிரியர்களும் தான் என்பதை உணர்ந்து, அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். அவர்களது அர்ப்பணிப்பை அங்கீகரிக்க வேண்டும் என்று சமூகத்தில் நல்ல நிலைக்கு வந்த ஒவ்வொரு பழைய மாணவரின் மனசாட்சியிலும் இது ஒலித்துக்கொண்டிருக்கும். இப்படிப்பட்ட ஒரு நெகிழ்ச்சி சம்பவம் தான் புதுச்சேரியில் நடந்துள்ளது.
கனரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்
தமிழ்நாடு - புதுச்சேரி மாநில எல்லையான திருக்கனூர் அடுத்த சித்தலம்பட்டில் இயற்கை சூழலுடன் அமைந்திருக்கும் அரசு பள்ளியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தற்போதும் கல்வி கற்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் படித்த மாணவர்களில் பலரும் அரசு துறைகளில் பல்வேறு முக்கிய பொறுப்புகளிலும், தொழில் அதிபர்களாகவும் உள்ளனர். இந்த சித்தலம்பட்டு அரசு பள்ளியில் 1985 மற்றும் 86 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் ஸ்கூல் பிரண்ட்ஸ் குரூப் சித்தலம்பட்டு என்ற whatsapp குழுவை உருவாக்கி இங்கு படித்த மாணவர்களை ஒன்றிணைத்தனர்.
இந்த முன்னாள் மாணவர்கள் தான் படித்த பள்ளிக்கு நாம் ஏதாவது ஒரு பொருள் உதவி செய்ய வேண்டும் தமக்கு பாடம் சொல்லிக் கொடுத்து தம்மை வாழ்க்கையில் முன்னேற்றிய ஆசிரியர்களுக்கு நன்றி கடன் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு முன்னாள் மாணவர்களின் சங்கமம் நிகழ்ச்சி சித்தலம்பட்டு அரசு பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 1985 மட்டும் 86 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் தங்கள் குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 38 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக சந்தித்த சுமார் 55 -வயது வரை உள்ள முன்னாள் மாணவர்கள 60-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி குருபூர்ணிமா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பின் மூலம் ஒவ்வொருவரும் பழைய நண்பர்கள் குடும்பத்துடன் மீண்டும் இணைந்துடன் மேலும் மனதில் இருக்கும் சந்தோஷத்தையும் கஷ்டத்தையும் பகிர்ந்து கொண்டனர். மேலும் ஒருவருக்கொருவர் செல்பி எடுத்துக் கொண்டு குரூப்பாக நின்று போட்டோவும் எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கி கௌரவித்தனர். மேலும் 85 மற்றும் 86 ஆம் ஆண்டு பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களை வரிசையாக நிற்க வைத்து அவர்களிடம் படித்த மாணவர்களும் வரிசையாக நின்று அவர்களின் காலில் விழுந்து பாதம் தொட்டு வணங்கி தங்களது நன்றி கடனை கண்ணீர் மல்க மகிழ்ச்சியுடன் செலுத்தினார்கள்.
பதிலுக்கு ஆசிரியர்களும் எல்லா வளமும் பெற்று வாழ்க வாழ்க பல நூறு ஆண்டு என்ற பாடலை பாடி அவர்களை மலர் தூவி வாழ்த்தினார்கள்.இந்த நிகழ்வு பார்ப்பவர்களை நெகிழ வைத்தது. மேலும் இதுகுறித்து முன்னாள் மாணவர்கள் கூறும் பொழுது, கடந்த 20 ஆண்டுகாலம் ஆசிரியராக பணியாற்றி இருந்தாலும் அப்போதெல்லாம் கிடைக்காத சந்தோஷம் இந்த முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் கிடைக்கிறது. உடல்நிலை சரியில்லாத போனாலும் மருத்துவர் இல்லாமலே இந்த நிகழ்ச்சி பார்க்கும்போது உடல்நிலை சரியானதாக தெரிவித்தார்.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூர கொலை
மேலும் தாம் படித்த பள்ளிக்கு தமக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியருக்கு நன்றி கடன் செலுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்தோடு இந்த முன்னாள் மாணவர் நிகழ்ச்சி நடத்தியதாகவும், தெரிவித்த முன்னால் மாணவர்கள் தங்களுடன் படித்த பழைய மாணவர்களை பார்க்கும்போது உள்ளம் மகிழ்ந்து மன நிறைவோடு உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் இந்த நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் மட்டுமின்றி அவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு ஆசிரியர்களிடம் ஆசிர்வாதம் பெற்று சென்றனர் இந்த சம்பவம் ஒரு பெரும் நெகிழ்ச்சியாக அமைந்திருந்தது.