நான் சொன்ன மாதிரி செஞ்சுட்டேன் பாத்தீங்களா! போற போக்கில் அதிமுகவை சீண்டி காலரை தூக்கிவிடும் முதல்வர் ஸ்டாலின்!
மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. மக்களின் தொடர் போராட்டத்திற்குப் பிறகு, மத்திய அரசு சுரங்க ஏலத்தை ரத்து செய்துள்ளது.
மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமத்தை வெட்டி எடுக்க சுரங்கம் அமைய இருந்தது. இதன் உரிமைத்தை வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் கைப்பற்றி இருந்தது. இது தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியானதோ அன்று முதல் டங்ஸ்டன் நிறுவனத்திற்கு எதிராக தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நாளுக்கு நாள் இந்த போராட்டம் தீவிரமடைந்து வந்தது.
மேலும் மதுரையில் ஜனவரி 7-ம் தேதி டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் மேலூர் சிட்டம்பட்டி டோல்கேட்டிலிருந்து மதுரை மாநகரான தல்லாகுளத்திற்கு 20 கி.மீ. தூரத்திற்கு மாபெரும் பேரணி நடைபெற்றது. இப்பிரச்சினை தமிழக சட்டப்பேரவையில் எதிரொலித்தது. தமிழக அமைச்சர்கள், மக்களுக்கு ஆதரவாக அரசு துணை நிற்கும் என்றும் நிச்சம் சுரங்கத்திற்கு எதிராக தமிழக அரசு போராடும் என்றார்.
இந்நிலையில் மத்திய கனிமவளத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விவசாயிகள் குழுவினர் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். அப்போது பேட்டியளித்த அண்ணாமலை: பொங்கலுக்கு பிறகு தமிழக மக்களுக்கு மிக மிக மகிழ்ச்சியான செய்தி வரும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு விடப்பட்ட ஏலத்தை ரத்து செய்ததாக மத்திய அரசு அறிவித்தது.
இதையும் படிங்க: மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து என்ற அறிவிப்பை அடுத்து அரிட்டாபட்டி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை மத்திய அரசு வெளியிடக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: நான் முதலமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன். இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை மத்திய அரசு வெளியிடக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக குற்றவாளி ஞானசேகரன் செய்த சம்பவம்! நள்ளிரவில் பதறிய போலீஸ்! நடந்தது என்ன?
சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம். மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்துள்ளது. இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை மத்திய அரசு வெளியிடக் கூடாது; மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அ.தி.மு.க.,வும் துணைபோகக் கூடாது என தெரிவித்துள்ளார்.