மதுரையில் 24 மணி நேர விமான சேவைக்கு அனுமதி
வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி முதல் மதுரை உட்பட நாட்டின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்த 5 விமான நிலையங்களில் 24 மணி நேரமும் விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, திருச்சி ஆகிய சர்வதேச விமான நிலையங்கள் 24 மணி நேர விமான சேவையை வழங்கி வருகின்றன. இதே போன்று மதுரை விமான நிலையத்திற்கும் 24 மணி நேர விமான சேவைக்கு அனுமதி வழங்க வேண்டும். அனுமதி வழங்கும் பட்சத்தில் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் தொழில் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என்று எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் தனித்தனியே கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி முதல் மதுரை, அகர்தலா, இம்பால், போபால், சூரத் ஆகிய 5 விமான நிலையங்கள் 24 மணி நேரமும் இங்கும். இதனால் இந்த 5 நகரங்களிலும் கூடுதல் விமானங்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை விமான நிலைய நிர்வாகம் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப் படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டின் பிறப்பிடம் மற்றும் ஜல்லிக்கட்டினால் வெடித்த போராட்டமும்… ஒரு பார்வை!!
தற்போது இரவு 8.40 மணி வரை மட்டுமே மதுரை விமான நிலையத்தில், விமான போக்குவரத்துக்கு அனுமதி உள்ள நிலையில், இனி 24 மணி நேரமும் விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.