தண்ணீருக்கு பதிலாக ஸ்பிரிட்டை குடிக்க கொடுத்த தாய்; ஒன்றும் அறியாத சிறுமி உயிரிழப்பு
மதுரை அரசு மருத்துவமனையில் தண்ணீர் என நினைத்து பெற்ற மகளுக்கு தாய் ஸ்பிரிட்டை குடிக்க கொடுத்த நிலையில், ஸ்பிரிட்டை குடித்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த கண்டியங்கொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார், தீபா தம்பதி. இவர்களுக்கு ஆதனா, அகல்யா என்ற இரு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் இவர்களது இரண்டாவது மகளான அகல்யா (வயது 8) சிறுநீரக பிரச்சினை காரணமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, தஞ்சை, சென்னை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 30ம் தேதி சிறுமி அகல்யா மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 15 நாட்களாக சிறுமிக்கு மருத்துவமனையில் டயாலசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன்படி நேற்று முன்தினமும் சிறுமிக்கு டயாலசிஸ் அளிக்கப்பட்டு சிறுமி ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார்.
இரகசிய ஆடியோவை அம்பலப்படுத்திய காவல்துறைக்கு எதிராக திமுக போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு
அப்போது சிறுமி தண்ணீர் தாகம் எடுப்பதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த பாட்டிலில் இருந்த தண்ணீரை சிறுமியின் தாயார் கொடுத்துள்ளார். அதனை குடித்த சிறுமி உடனடியாக அதனை துப்பியுள்ளார். அதனை பார்த்த செவிலியர், அது தண்ணீர் கிடையாது நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ஸ்பிரிட் என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சிறுமி உடனடியாக அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு சிறுமிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையிலும் சிறிது நேரத்திலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
பெண் ஊழியரின் கவனத்தை திசை திருப்பி செல்போனை திருடிய மர்ம நபர்; சிசிடிவியால் அம்பலம்
இது தெதடாபாக சிறுமியின் தாயார் கூறுகையில், எனது மகள் அதிகம் தாகம் எடுப்பதாக கூறியதால் அருகில் இருந்த நீரை எடுத்துக் கொடுத்தேன். தண்ணீர் என்று நினைத்து தான் அதனை கொடுத்தேன். ஆனால் அது ஸ்பிரிட் என்று செவிலியர்கள் கூறுகின்றனர். சிகிச்சை அறையில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஸ்பிரிட் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செவிலியர்களிடம் விசாரிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரை தல்லாகுளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.