மதுரை பறக்கும் பாலத்தில் கோர விபத்து; 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி
மதுரை நத்தம் பறக்கும் பாலத்தில் அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம் பக்கவாட்டு சுவரில் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலயே உயிரிழப்பு.
மதுரை மாநகர் வடக்குமாசி வீதி பகுதியைச் சேர்ந்த ஆனந்த்கிருஷ்ணன் மற்றும் மதுரை பெத்தானியாபுரம் மூலப்பிள்ளை தெரு பகுதியை சேர்ந்த சீனிவாசன் (24) ஆகிய இருவரும் மதுரை கள்ளந்திரி பகுதியில் உள்ள அவர்களது நண்பரின் கிணற்றில் குளித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
அப்போது பறக்கும் பாலத்தின் மேல் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்துகொண்டிருந்தபோது அவுட்போஸ்ட் அருகே மேம்பாலத்தில் திரும்பும்போது வளைவில் பக்கவாட்டுசுவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் வேகமாக இருசக்கர வாகனம் மோதியதில் வாகனத்தை ஓட்டிவந்த ஆனந்தகிருஷ்ணன் சுவரில் மோதி உயிரழந்த நிலையில் மேம்பாலத்தில் இருந்து பறந்து சென்று கீழே விழுந்து சீனிவாசன் தலை சிதறி சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.
பணம் தராவிட்டால் இலவச மின்சாரம் கிடையாது; அதிகாரிகளின் அடாவடி தனத்தால் கதி கலங்கும் நெசவாளர்கள்
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் காவல்துறையினர் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து தல்லாகுளம் போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சபரிமலை பம்பை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு, திரிவேணி பாலத்தை ஒட்டி செல்லும் வெள்ளம்
மதுரை நத்தம் பறக்கும் மேம்பாலத்தில் பக்கவாட்டு சுவர்கள் சிறியதாக இருப்பாதலும், பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படாமல் இருப்பதாலும், இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரியாத நிலையில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனத்தை ஓட்டிச் செல்லும் நிலை உள்ளது. இதுபோன்று நாள்தோறும் ஏராளமான இளைஞர்கள் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் பந்தயத்தில் ஈடுபடுவதாலும் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருவது குறிப்பிடதக்கது.