1200 ஆண்டுகள் பழமையான கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு… பாண்டியர்கள் காலத்தைச் சேர்ந்தாக இருக்கும் என கணிப்பு!!
மதுரை அருகே சுமார் 1200 ஆண்டுகள் பழமையான கொற்றவை சிற்பம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மதுரை அருகே சுமார் 1200 ஆண்டுகள் பழமையான கொற்றவை சிற்பம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே கணவாய் கருப்பசாமி கோவில் ஒன்று உள்ளது. அதன் எதிரே இருக்கும் ஊரணி கரையில் மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத்துறை தலைவரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர் லட்சுமண மூர்த்தி அஸ்வத்தாமன், ஆய்வாளர் அனந்த குமரன் ஆகியோர் கணவாய் பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுமார் 1200 ஆண்டுகள் பழமையான கொற்றவை சிற்பம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பரிசு தொகுப்பு... அறிவித்தது தமிழக அரசு!!
இதுக்குறித்து உதவிப் பேராசிரியர் முனீஸ்வரன் கூறுகையில், செக்கானூரணி இருந்து மேலக்கால் செல்லும் சாலையில் கணவாய் கருப்பசாமி கோவில் எதிரே ஊரணி கரையில் புதைந்த நிலையில் கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டது. இச்சிற்பத்தில் 4 அடி உயரம் 2 அடி அகலம் கொண்ட பலகைக்கல்லில் நான்கு கரங்களுடன் புடைப்புச் சிற்பமாக காட்சி தருகிறாள் கொற்றவை. தலையில் கரண்ட மகுடம் அலங்கரிக்க, வட்ட வடிவிலானை முகம் தேய்மானத்தோடு காணப்படுகின்றன. இரு காதுகளில் பத்ர குண்டலங்கள் கழுத்தில் ஆரம் போன்ற அணிகலன், கைகளில் கைவளைகள் அனிந்து கம்பீரமாக நின்றவாறு காட்சி தருகிறாள். கீழ் பகுதி மண்ணில் புதைந்து காணப்படுகிறது.
இதையும் படிங்க: காப்புக்காடுகள் அருகே குவரிகள் செயல்பட்டால் மூடப்படும்... எச்சரிக்கை விடுத்த அமைச்சர் மெய்யநாதன்!!
தன் கரங்களில் பிரயோகச் சக்கரம், சங்கு, ஏந்தியயும் வலது கரத்தில் அபய முத்திரையும் செதுக்கப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் மிக பிரமாண்டமாக எட்டு கைகளுடன் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்ட கொற்றவை காலப்போக்கில் நான்கு கைகயோடு எளிமையான முறையில் செதுக்கப்பட்டுள்ளது. நான்கு கைககள் கொண்டு இருப்பதால் சதுர் புஜ துர்க்கை என்றும் அழைக்கப்படுகின்றது. விருதுநகர் மாவட்டம் பள்ளிமடத்தில் இச்சிற்பத்தை போன்ற கொற்றவை சிற்பம் உள்ளது. அந்த சிற்பம் இரண்டாம் வரகுண பாண்டியர்கள் காலத்தைச் சேர்ந்தவை. தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள கொற்றவை சிறபத்தின் உருவத்தை பார்க்கும்போது, கி.பி 9ம் நூற்றாண்டில் பிற்காலத்தில் முற்கால பாண்டியர்கள் காலத்தைச் சேர்ந்தாக இருக்கும் என்று தெரிவித்தார்.