Asianet News TamilAsianet News Tamil

WATCH | மத்திய அரசின் ஸ்கூலில் முதல்வர் ஸ்டாலின் ஹெட்மாஸ்டர்! - சைதை சாதிக்!

அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து மத்திய அரசு தவறு செய்துவிட்டதாகவும், மத்திய அரசின் ஸ்கூலில் முதல்வர் ஸ்டாலின் ஹெட்மாஸ்டர் என கரூரில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் திமுக பேச்சாளர் சைதை சாதிக் பேசியுள்ளார்.
 

kalaignar 100th birthday festival meeting held on Karur
Author
First Published Jun 28, 2023, 11:46 AM IST

அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து மத்திய அரசு தவறு செய்துவிட்டதாகவும், மத்திய அரசின் ஸ்கூலில் முதல்வர் ஸ்டாலின் ஹெட்மாஸ்டர் என கரூரில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் திமுக பேச்சாளர் சைதை சாதிக் பேசியுள்ளார்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 80 அடி சாலையில் மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைமைக் கழக பேச்சாளர்கள் நாஞ்சில் சம்பத் மற்றும் சைதை சாதிக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்.

அப்போது உரையாற்றிய சைதை சாதிக், அமலாக்கத்துறை, வருமானவரித்துறை என மத்திய அரசின் ஏஜெண்டாக செயல்படும் அமைப்புகளை வைத்து திமுகவை மிரட்டி பார்க்க நினைக்கிறார்கள். இந்திரா காந்தி எமர்ஜென்சியை அமல்படுத்திய போது அதை எதிர்த்து நின்றவர் கருணாநிதி. அவர் வழிவந்த மு.க.ஸ்டாலின் மற்ற மாநில முதல்வர்களை போல் ரெய்டுகளை கண்டு பயப்படாமல் மோடியை எதிர்த்துப் பேசக்கூடியவர்.

செந்தில் பாலாஜி மீது வைத்திருந்த பாசமும், நம்பிக்கையும் காரணமாக அவரை கைது செய்த மூன்று மணி நேரத்தில் நான் திருப்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள் என்று பேசினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

பார் உரிமையாளர்களிடம் வசூல் வேட்டை? ராஜேஸ்வரி பிரியா மீது புகார்!

செந்தில் பாலாஜிக்கு எதிராக ஏன் எல்லா வேட்டை நாய்களையும் விடுகிறார்கள். செந்தில் பாலாஜி ஏன் முடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர் வெளியே இருந்தால் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்காக 10 தொகுதிகளை வெற்றி அடைய செய்வார். செந்தில் பாலாஜியை முடக்க பார்த்தார்கள் ஆனால் மருத்துவமனையில் அவர் சிகிச்சையில் இருந்தாலும் அவர் கண்காணிப்பில் கரூரில் இவ்வளவு பெரிய பொதுக்கூட்டம் நடைபெறுகிறது என்றார்.

செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக முன்மொழிந்து கவர்னருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. செந்தில்பாலாஜி அமைச்சராக தொடரக்கூடாது என்று கவர்னர் கூறினார். செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து மத்திய அரசு தவறு செய்துவிட்டதாகவும், மத்திய அரசின் ஸ்கூலில் முதல்வர் ஸ்டாலின் ஹெட்மாஸ்டர் எனவும் பேசினார்.

கறுப்பு உடை சர்ச்சை.. பெரியார் பல்கலைஅறிவிப்பை வாபஸ் பெற்றாலும் சேலத்தில் பதற்றம்.. என்ன காரணம்?

Follow Us:
Download App:
  • android
  • ios