கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலா பயணிகள்!
வார விடுமுறை முன்னிட்டு சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி கடற்கரையில் சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகாலையிலையே காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.மேலும் கடலில் குடும்பத்துடன் கால் நனைத்து விளையாடி மகிழ்ந்தனர்.
சர்வதேச சுற்றுலாத் தலமாக கன்னியாகுமரிக்கு தினசரி ஆயிரக்கணக்கான உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர்,வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர். அவர்கள் காலை சூரிய உதயம், மாலை சூரிய அஸ்தமனம் மற்றும் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயரம் உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று இயற்கை பார்த்து ரசிப்பார்.
அந்த வகையில் இன்று வாரத்தின் விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை காண அதிகாலையில் குவிந்தனர் மேலும் கடற்கரை சூரிய உதயம் காணும் திடலில் காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். மேலும் தங்களின் செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்தனர், அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி கடலில் குடும்பத்துடன் கால் நனைத்து விளையாடி மகிழ்ந்தனர்.
மேலும் கன்னியாகுமரியில் உள்ள பல்வேறு இடங்களுக்கு குடும்பங்களுடன் சென்று விடுமுறையை களித்து வருகின்றனர். அதே போல் கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு செல்ல படகு சவாரியும் செய்து வருகின்றனர்.