Asianet News TamilAsianet News Tamil

அதிமுகவை ஆட்டிப்படைக்கும் பாஜக.!மோடி, அமித்ஷா கை காட்டுபவர்களுக்கே இரட்டை இலை சின்னம்- திருநாவுக்கரசர் அதிரடி

மூன்று நான்கு பிரிவுகளாக உள்ள அதிமுகவை பாஜக இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது ஆனால் அவர்கள் ஒன்று சேர்வதாக  இல்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்

Thirunavukarasar criticized BJP for keeping AIADMK as its puppet
Author
First Published Jan 29, 2023, 8:06 AM IST

தோல்வி பயத்தால் அச்சம்

நெல்லையில் உள்ள  சவேரியார் கல்லூரி மாணவர் மன்ற நூற்றாண்டு விழாவில் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வரும் 3 ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறோம். ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவன் மகத்தான வெற்றி பெறுவார். கடந்த முறையை விட இந்த முறை வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அவர் பெறுவார். வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கு முன்பே அதிகார துஷ்பிரயோகம் பணம் பலம் என்று பாஜக கூறுவது அவர்கள் படுதோல்வி அடைவோம் என்ற பயத்தில் புலம்ப ஆரம்பித்து விட்டதைபோல் உள்ளதாக விமர்சித்தார்.

Thirunavukarasar criticized BJP for keeping AIADMK as its puppet

பாஜகவின் கைப்பாவையாக அதிமுக

திமுக கூட்டணி கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற,உள்ளாட்சி தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக திமுக தலைவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பாக நல்லாட்சி நடத்தி வருகிறார்.அதிமுக மூன்று நான்கு அணிகளாக பிரிந்துள்ளது. யார் வேட்பாளர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியாமால் குழப்பத்தில் சிக்கியிருக்கின்றனர்.அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்குமா தனியாக நிற்குமா என்பதே இதுவரை தெரியவில்லை. பாஜக தனது கைப்பாவையாக அதிமுகவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. பாஜக அதிமுகவில் பிரிந்துள்ளவர்களை ஒன்று சேர்க்க முயற்சி செய்கிறது. ஆனால் ஒன்று சேர முடியுமா என தெரியவில்லை. அதிமுக கூட்டணியில் பிரிந்தவர்கள் வெகு தொலைவாக சென்று விட்டார்கள். 

Thirunavukarasar criticized BJP for keeping AIADMK as its puppet

திமுக கூட்டணியே வெற்றி பெறும்

இபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும் இணைவார்களா என்பது தெரியவில்லை.அதிமுகவிற்கு சின்னத்தை கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம். சின்னத்தைப் பொறுத்தவரை மோடியோ அமித்ஷாவோ மேல் இடத்தில் உள்ளவரோ சொல்வது தான் நடக்கும்.யார் எந்த சின்னத்தில் நிற்பார்கள் என்பதே இதுவரை தெரியவில்லை தாமரை நின்றாலும் இரட்டை இலை நின்றாலும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் மகத்தான வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

தமிழ்நாட்டு பெயரை உள்நோக்கத்தோடு திரித்து வெளியிட்ட மோடி அரசு.! தமிழர்களை இழிவுப்படுத்தும் செயல் -சீமான்

Follow Us:
Download App:
  • android
  • ios