Asianet News TamilAsianet News Tamil

ஆக்சிஜன் மாஸ்க்காக பயன்படுத்தப்படும் டீ கப்புகள்; அரசு மருத்துவமனையின் அவலத்தை கண்டு நடுங்கும் நோயாளிகள்

உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க் இல்லாததால் டீக்கடையில் பயன்படுத்தப்படும் பேப்பர் கப்புகளை வாங்கி பயன்படுத்தும் அவலம்.

tea cup used as a oxygen mask in uthiramerur government hospital video goes viral in kanchipuram district
Author
First Published Aug 2, 2023, 9:37 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அரசு பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவதியற்ற மாணவனுக்கு  மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மாணவனை அழைத்துக் கொண்டு அவரது தந்தை உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். 

அங்கே மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூச்சுக் குழல் வழியாக மருந்தினை செலுத்த வேண்டுமென்று அறிவுறுத்தி இருக்கின்றனர். மாணவனின் மூச்சு குழல் வழியாக மருந்தை செலுத்துவதற்கு உண்டான மருத்துவ உபகரண கருவி இல்லாத காரணத்தினால் அருகிலுள்ள டீ கடையில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகளை வாங்கி வந்து அதன் உதவியுடன் அந்த மருந்தினை மாணவனின் மூக்கு வழியாக செலுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த காட்சி அங்கு உள்ளவர்களை பதைபதைப்பில் ஆழ்த்தியது.

1600 கோடி முதலீடு; 6 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் ராஜா உறுதி

அரசு மருத்துவமனைக்கு சாதாரண ஏழை, எளிய மக்கள்தான்  அதிக அளவில் சிகிச்சை பெற வருகின்றனர்.  ஆனால் அங்கே முறையான சிகிச்சை அளிப்பதற்கு ஒரு சிறிய அளவிலான மருத்துவ உபகரணம் கூட இல்லாத சூழல் நிலவுகிறது.

சென்னையில் காதலி ரயில் முன் தள்ளிவிட்டு கொலை? காதலனிடம் காவல்துறை தீவிர விசாரணை

அந்த பள்ளி மாணவனுக்கு ஆக்சிஜன் செலுத்த மாஸ்க் இல்லாத காரணத்தினால் டீக்கடையில் இருந்து டீ குடிக்கும் கப்புகளை வாங்கி வந்து அதை வைத்து மூச்சுத் திணறல் ஏற்பட்ட மாணவனுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் ஆபத்தான விஷயம். இந்த நிலையை அரசு மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து செய்கின்றது. இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள்  வேண்டுகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios