Asianet News TamilAsianet News Tamil

H Raja: வாயை மூடிக்கொள்ளுங்கள்; இல்லையென்றால் உங்கள் பின்புலங்களை ஆராய நேரிடும் - எச்.ராஜா எச்சரிக்கை

கொள்கை பிடிப்பு இல்லாத செல்வப் பெருந்தகை பாஜக பற்றி பேச அருகதை இல்லை எனவும் பேச முயற்சித்தால் அவருடைய பின்புலங்களை ஆராய வேண்டிய வரும் என எச். ராஜா காஞ்சிபுரத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

bjp senior leader h raja slams tamil nadu congress committee president selvaperunthagai in kanchipuram vel
Author
First Published Jun 8, 2024, 9:47 AM IST | Last Updated Jun 8, 2024, 9:47 AM IST

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு நேற்று மாலை வருகை புரிந்தார். சங்கர மட மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அதைத் தொடர்ந்து இருபது நிமிடம் தனிமையில் இருவரும் சந்தித்து உரையாடினர். அதன் பின்னர் காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார். 

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா, பா.சிதம்பரம் அவர்களுக்கு பொருளாதாரம் தான் தெரியாது என்றால் அவர்களுக்கு கணக்கு கூட தெரியவில்லை. பாஜக ஏற்கனவே 430 தொகுதியில் போட்டியிட்டு மீதி கூட்டணிக்கு வகுத்தது. அதில் 240 தொகுதி வெற்றி பெற்றது. ஆனால் பா.சிதம்பரம் கணக்கு தெரியாமல் 99 வித்தியாசம் தெரியாமல் பேசுகிறார். வயது மூப்பு காரணமாக இதுபோன்று பேசி வருகிறார்.

மனைவியின் கல்வி கடனை அடைக்க வெளிநாடு சென்ற வாலிபர்; இன்ஸ்டா காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி - தென்காசியில் பரபரப்பு

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டும் எனவும், மோடி அரசு தோல்வி பெற வேண்டும் எனவும் இஸ்ரேரில் உள்ள தனியார் அமைப்பு  மூலம் வேலை செய்ததாக விசியங்கள் வெளிய வந்துள்ளது. இது போன்று தேச துரோக பணி செய்தவர்கள் யார் என்று கண்டறிய விசாரணை அமைக்க உள்ளது. எதிர்க்கட்சிகள் வாக்கு பிரிந்ததால் தான் திமுக வெற்றி பெற்றதே தவிர கடந்த முறை பெற்ற வாக்குகளை விட இந்த முறை திமுக வாக்கு வங்கி குறைந்து உள்ளது.

அனைத்து மதங்களுக்கும், அனைத்து மேம்பாடும் நடைபெற்று கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி அவர்கள் ஆட்சி செய்து வருகிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியும், மதப் பிரிவினைவாதைகளை உண்டாக்கும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளில் கூட சிறுபான்மையினரை குறிப்பிட்டு பெரும்பான்மையானவர்களை தள்ளியுள்ளார். 

40 சீட் ஜெயிச்சாச்சு! அப்புறம் எதுக்கு வேடிக்கை! நீட் தேர்வை ரத்து செய்ற வேலைய பாருங்க! சீறும் சீமான்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை குறிப்பிட்டு திமுகவினர் ஆடுகளை வெட்டிய நபர்கள் மீது மிருக வதை சட்டத்தின் கீழ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறி வருவது தவறானது. செல்வப்பெருந்தகை பல கட்சிகளில் பயணித்து தற்போது காங்கிரஸில் உள்ளார். பாஜக பற்றி பேச அவருக்கு அருகதை இல்லை. மீறி பேசினால் அவருடைய பல்வேறு பின்புலங்களை ஆராய வேண்டியிருக்கும். ஆகவே வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios