செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இருக்கிறது கொளத்த நல்லூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பூபாலன். இவரது மகள் அபிநயா. 8 வயது சிறுமியான இவர் அங்கிருக்கும் ஒரு பள்ளியில் 3 வகுப்பு படித்து வந்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் வீட்டில் அபிநயா வீட்டில் இருந்திருக்கிறார்.

நேற்று வீட்டின் அருகே நண்பர்களுடன் அபிநயா விளையாடிக்கொண்டிருந்தார். வெகு நேரமாக வீட்டிற்கு வராததால் அபிநயாவை பெற்றோர் தேடி இருக்கின்றனர். ஆனால் அவரை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உறவினர்கள் உதவியுடன் பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அந்த பகுதியில் இருக்கும் கிணறு ஒன்றில் சிறுமி ஒருவர் பிணமாக கிடப்பதாக தகவல் வந்திருக்கிறது. இதையடுத்து அங்கு சென்று பார்த்து போது அது அபிநயா என்பது தெரியவந்தது.

image

சடலமாக மிதந்த அபிநயாவைக்கண்டு பெற்றோரும் உறவினர்களும் கதறி துடித்தனர். அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் அபிநயாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. விளையாடும் போது சிறுமி கால் தவறி விழுந்தாரா? அல்லது வேறு ஏதும் சம்பவம் நிகழ்ந்ததா? என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Also Read: அதிகாலையில் கோர விபத்து..! கார்-அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதிய ஆம்னி பஸ்..! 4 பேர் உடல் நசுங்கி பலி..!