ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே இருக்கும் அம்மனூரைச் சேர்ந்தவர் ஐசக்(54). இவரது மகன் ராஜன் விண்ணரசு(27). இவரது திருமணத்திற்காக திருநெல்வேலியில் பெண் பார்க்கப்பட்டு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நிச்சயம் முடிந்த பிறகுகுடும்பத்துடன் மீண்டும் அரக்கோணம் திரும்பிக்கொண்டிருந்தனர். காரை வினோத்(25) என்பவர் ஓட்டி வந்தார். 

உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் காருக்கு பின்னால் அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. காரின் கண்ணாடியில் பேருந்து உரசியதாக தெரிகிறது. இதனால் பேருந்தை நிறுத்தி காரில் இருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அங்கு ஆம்னி பேருந்து ஒன்று வேகமாக வந்தது. எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்ற அரசு பேருந்து மற்றும் கார் மீது ஆம்னி பேருந்து பயங்கரமாக மோதியது.

இதில் காரில் வந்த ராஜன் விண்ணரசு, வெள்ளைச்சாமி(33), சற்குணன் (34) உட்பட நான்கு பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். 22 பேர் படுகாயமடைந்தனர். அந்தவழியாக சென்றவர்கள் காயம்பட்டவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விரைந்து வந்த காவலர்கள் பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். பின் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. விபத்து குறித்து வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Also Read: கார் மீது பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்..! தூக்கி வீசப்பட்டு வாலிபர்கள் துடிதுடித்து பலி..!