வீட்டிற்குள் நுழைய முயன்ற நாக பாம்பை தடுத்து நிறுத்திய செல்லப் பிராணியான பூனை; நெகிழ்ச்சி சம்பவம்!!
கோவையில் வீட்டுக்குள் நுழைய முயற்சித்த நாகப் பாம்பை விசுவாசமிக்க பூனை தடுத்தது நிறுத்திய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கவுண்டம்பாளையம் சரவணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜர். இவரது வீட்டில் நான்கு அடி நீளமுள்ள நாக பாம்பு ஒன்று கேட்டில் இருந்து வீட்டின் படிக்கட்டு நோக்கி வந்து கொண்டு இருந்தது. படிக்கட்டில் ஏறிய பாம்பு வீட்டிற்குள் நுழைய முயற்சித்தது. அப்போது அந்த வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த பூனை அந்தப் பாம்பை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்தது. பூனை சீறலை அறிந்தவுடன் வீட்டுக்குள் இருந்தவர்கள் கதவை மூடினர்.
இதையடுத்து, வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்ந்த பாம்பு பிடி வீரர் ஒருவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பாம்பு பிடி வீரர் விரைந்து வந்து பாம்பை பிடித்து பாட்டிலில் அடைத்து எடுத்துச் சென்றார்.
Rain in Coimbatore: கோவை காணுவாய் - பன்னிமடை சாலையில் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளம்!!
முன்னதாக பூனை மற்றும் பாம்பு ஒன்றுக்கொன்று எதிர்கொள்ளும் புகைப்படம் வெளியாகி உள்ளது. செல்லப்பிராணியான பூனை, வீட்டுக்குள் பாம்பு நுழைவதை தடுத்து நிறுத்தியது நெகிழ்ச்சிக்குரிய விசயமாக அந்தப் பகுதி மக்கள் பார்க்கின்றனர். பாம்புவும் பூனையும் ஒன்றுக்கொன்று 15 நிமிடம் ஆடாமல் அசையாமல் பார்த்துக்கொண்டது என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
கோவையில் நாளுக்கு நாள் வேகமெடுக்கும் ப்ளூ காய்ச்சல்; முக கவசம் அணிய மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்