Asianet News TamilAsianet News Tamil

தூக்க கலக்கத்தில் வேனை மரத்தில் மோதிய ஓட்டுநர்..! சாவு வீட்டிற்கு சென்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைப்பு..!

சேத்துப்பட்டு அருகே வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை வேன் இழந்தது. திடீரென சாலையில் தாறுமாறாக வேன் சென்றதால் அதில் பயணம் செய்தவர்கள் அதிர்ச்சியடைந்து கூச்சல் போட்டனர். ஓட்டுனரால் வேனை கட்டுப்படுத்த முடியாத நிலையில் சாலையோரம் இருந்த மரம் மீது பயங்கரமாக மோதியது.

van met with an accident
Author
Pollachi, First Published Jan 28, 2020, 5:41 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இருக்கும் சேத்துப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் நேற்று மரணமடைந்தார். சுப்புராஜின் உறவினர்கள் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இருக்கும் தருமாத்தூரணி கிராமத்தில் வசித்து வருகின்றனர். அவர் உயிரிழந்த தகவல் தெரியவந்ததும் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக கோவை செல்ல முடிவெடுத்தனர்.

van met with an accident

இதற்காக ஒரு வேனில் உறவினர்கள் 15 பேர் சேத்துப்பட்டு நோக்கி கிளம்பினர். வேனை சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் ஓட்டி வந்தார். சேத்துப்பட்டு அருகே வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை வேன் இழந்தது. திடீரென சாலையில் தாறுமாறாக வேன் சென்றதால் அதில் பயணம் செய்தவர்கள் அதிர்ச்சியடைந்து கூச்சல் போட்டனர். ஓட்டுனரால் வேனை கட்டுப்படுத்த முடியாத நிலையில் சாலையோரம் இருந்த மரம் மீது பயங்கரமாக மோதியது.

van met with an accident

இதில் ஓட்டுநர் மகேஷ், இருளப்பன்(74), ராஜன் ( 55) உட்பட வேனில் பயணம் செய்த 15 படுகாயமடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவலர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் வேனை ஓடியதால் விபத்து நடந்ததாக தெரிய வந்துள்ளது.

Also Read: 'கலெக்டர்ல இருந்த எல்லாரையும் அவங்க கவனிக்கிறாங்க.. விட்டுரு'..! மணல் கடத்தலுக்கு ஆதரவாக வி.ஏ.ஓ வை மிரட்டிய வருவாய் அதிகாரி..!

Follow Us:
Download App:
  • android
  • ios