பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு... தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் முதலிடம்!!

தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வினை 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 30 முதல் ஏப்ரல் 11ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து மதிப்பெண்ணைப் பதிவேற்றும் பணி நடைபெற்றது.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி இன்று காலை 9.30 மணியளவில் இணையத்தில் தேர்வு முடிவு வெளியிட்டது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் காணலாம். அது மட்டுமல்லாமல், மாணவர்கள் அளித்த செல்போனுக்கு குறுந்தகவலும் அனுப்பப்படும் என்று தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது.

இந்நிலையில் சற்று முன்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின. மொத்த தேர்ச்சி விகிதம்- 91.03% மாணவிகள் தேர்ச்சி- 93.64% மாணவர்கள் தேர்ச்சி- 88.57%, வழக்கம் போல மாணவர்களைவிட மாணவிகள் 5.07% அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் முதலிடம். ஈரோடு, பெரம்பலூர் ஆகியவை முறையே அடுத்தடுத்த இடங்கள் பெற்றுள்ளது. தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் அடைந்துள்ளது. திருப்பூரில்  95.37% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர், ஈரோட்டில்  95.23% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர், 95.15% மாணவ, மாணவிகள் பெரம்பலூரில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.