தமிழக பாஜக கோயம்புத்தூர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கோயம்புத்தூர் நகர் மாவட்ட தலைவராக பணியாற்றி வந்த திரு.பாலாஜி உத்தம ராமசாமி அவர்கள் மாவட்டத்தினை சிறப்பான முறையில் வழிநடத்தி களப்பணியாற்றி வந்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
தற்பொழுது சொந்த காரணங்களுக்காக பாஜகவின் மாவட்ட தலைவர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கடிதம் கொடுத்துள்ளார். அவருடைய கடிதத்தினை ஏற்றுக்கொண்டு இன்று முதல் மாவட்ட தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மாநில செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்படுகிறார்.

கோயம்புத்தூர் நகர் மாவட்ட பொது செயலாளராக பணியாற்றி வந்த திரு.J.ரமேஷ்குமார் அவர்கள் புதிய மாவட்ட தலைவராக நியமனம் செய்யப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
ரூ.490 கோடி சொத்து மதிப்பு.. இந்தியாவின் பணக்கார காமெடி நடிகர் இவர்தான்.. யார் தெரியுமா?
