படிப்புக்கேற்ற வேலை என்பதே திராவிட மாடல்… அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கருத்து!!

அரசு பள்ளி பாடத்திட்டத்தை ஒத்தே சிபிஎஸ்சி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பாடத்திட்டம் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

study oriented job is a dravida model says anbil mahesh poiyamozhi

அரசு பள்ளி பாடத்திட்டத்தை ஒத்தே சிபிஎஸ்சி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பாடத்திட்டம் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், கல்வி மருத்துவம் ஆகிய இரண்டிலும் முதல்வர் அதிக கவனம்  செலுத்தி வருகிறார். மற்ற நாடுகள் நம்மை பார்த்து பயப்படுகிறார்கள். நம்மிடம் உள்ள ஆயுதத்தை பார்த்து அல்ல; நம்மிடம் உள்ள இளைய சமுதாயத்தை பார்த்து. பிற்போக்குவாதிகளை விட நாம் வேகமாக இருக்க வேண்டும். அனைவருக்கும் படிப்புக்கேற்ற வேலை என்பதே திராவிட மாடல். திறமை என்பது வாங்கும் மதிப்பெண்களில் இல்லை. ஒவ்வொருவரின் தனித்திறத்திறனில் தான் இருக்கிறது. சிபிஎஸ்சி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் இருந்து வருகிறேன் என்கிறார்கள்.

இதையும் படிங்க: சாலை விரிவாக்கத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுவன் பலி... கடலூரில் நிகழ்ந்த சோகம்!!

எங்களிடம் அரசு பள்ளிகள் இருக்கிறது. நாங்களும் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல. எங்களிடம் உள்ள பாடத்திட்டத்தை ஒத்தே சிபிஎஸ்சி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பாடத்திட்டம் உள்ளது. அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம் என்பதை நிலைநாட்டுவதற்காகத்தான் உழைத்துக்கொண்டிருக்கிறோம். தனியார் பள்ளி நடத்துபவர்களும் அரசு பள்ளிகளை வந்து பார்க்க வேண்டும். நாங்களும் தனியார் பள்ளிகளை பார்க்கிறோம். எங்களிடம் இருந்து தனியார் பள்ளிகள் சிலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: சிஎம்சி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அரை நிர்வாண ராக்கிங்; 7 மாணவர்கள் சஸ்பெண்ட்; வைரல் வீடியோ!!

நாங்களும் தனியார் பள்ளிகளை பார்த்து கற்றுக் கொள்கிறோம் என்று தெரிவித்தார். முன்னதாக கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் குழுமத்தின் பொன்விழா ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பு மகேஷ்  பொய்யாமொழி கலந்து கொண்டு பொன்விழா நினைவுத்தூணை திறந்து வைத்தார். மேலும் "Icons of Coimbatore" என்ற பெயரில்  தொழில், கலை, மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்கள்  ஒன்பது பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டதோடு சினிமா மற்றும் யூடிப் பக்கத்திலும் அசாத்திய திறமையால் புகழ் பெற்ற கோவை மாவட்டத்தை சேர்ந்த ரித்விக் என்ற சிறுவனுக்கும் விருது வழங்கப்பட்டது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios