மாணவர்களின் பசியாற்றும் திட்டத்தை தரம் தாழ்ந்து விமர்சிப்பதா? நாளிதழை எரித்து மாணவர்கள் போராட்டம்

அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் காலை சிற்றுண்டி, மதிய சத்துணவை விமர்சித்து செய்தி வெளியிட்டிருந்த பத்திரிகைக்கு மாணவர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

students protest against private newspaper in coimbatore for criticizing morning breakfast scheme vel

வியாழக்கிழமை காலை வெளியான நாளிதழ் ஒன்றின் தலையங்கத்தில் மாணவர்கள் இரண்டு நேர காலை சிற்றுண்டி, மதிய உணவு, ஆகிய இரண்டு நேர உணவுகள் அருந்தி மலம் கழிப்பதினால் கழிவறை நிறைவதாக வன்மம் நிறைந்த வார்த்தைகள் கொண்டு செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த செய்தி கான்பவர்களை மிகுந்த களக்கத்தை உண்டுசெய்யும் வகையில் அமைந்தது. ஈரோடு, சேலம், ஆகிய பதிப்புகள் வெளியிட்ட செய்தி காலை முதலே சமூக ஊடகங்கள் மூலம் தமிழகத்தில் தீயாக பரவ துவங்கியது. இந்த செய்திக்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்த நிலையில் உடனுக்குடன் தவறை ஒப்புக்கொண்டு, நாளிதழ் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ கல்லூரிக்குள் சென்று விநாயகர் சதுர்த்திக்கு டொனேசன் கேட்டு வாக்குவாதம்

தமிழக அரசு மற்ற மாநில அரசுகளுக்கு முன் உதாரணமாக பள்ளி கல்வியில் முன்னுரிமை செலுத்தி, பல்வேறு சலுகைகள் வழங்கி மாணவர்களுக்கு கல்வி பயில வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கிறது. அவ்வாறு வழங்கப்படும் காலை சிற்றுண்டி திட்டத்தை எதிர்க்கிற நோக்கில் பள்ளி மாணவர்களை தரக்குறைவாக சித்தரித்து, கொச்சை வார்த்தைகள் கொண்டு வன்மத்தை வெளிப்படுத்திய நாளிதழை புறக்கணிப்போம் என்கிற கோஷத்தோடு, பத்திரிகையை எரிக்கும் போராட்டத்தை இந்திய மாணவர், வாலிபர், மாதர் அமைப்பினர் நடத்தினர். 

கோவையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பத்திரிகையை எரித்து தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios