Asianet News TamilAsianet News Tamil

ஈஷாவில் சப்தரிஷி ஆரத்தி..! காசியைச் சேர்ந்த 7 உபாசகர்கள் நடத்தினர்

ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு சப்தரிஷி ஆரத்தி நேற்று (டிச. 22) சிறப்பாக நடைபெற்றது.
 

saptarishi aarathi in front of adiyogi statue in isha
Author
First Published Dec 23, 2022, 5:34 PM IST

ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு சப்தரிஷி ஆரத்தி நேற்று (டிச. 22) சிறப்பாக நடைபெற்றது.

இந்த சப்தரிஷி ஆரத்தி, சிவ பெருமான் தனது ஏழு சீடர்களான சப்தரிஷிகள், அவரது அருளைப் பெறுவதற்காக அவர்களுக்கு கற்றுக்கொடுத்த சக்திவாய்ந்த செயல்முறை. இது வாரணாசியில் இருக்கும் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் பல நூறு வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தப்படியாக ஆதியோகியில் தான், கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

நீங்கள் சிறப்பாக வணிகம் செய்ய வேண்டுமா? முக்தி நிலையில் இருங்கள்! ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் சத்குரு ஆலோசனை

இந்நிகழ்ச்சிக்காக , காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து 7 உபாசகர்கள் ஈஷாவிற்கு வருகை தந்தனர். அவர்கள் யோகேஷ்வர லிங்கத்தை சுற்றியமர்ந்து சந்தனம், புனித நீர், வில்வம், மலர்கள் போன்ற பல்வேறு மங்கள பொருட்களால் லிங்கத்தை அலங்கரித்து செயல்முறையை துவக்கினர்.

ஈஷாவின் வழிகாட்டுதலால் ரூ.17.7கோடி Turn over செய்த விவசாயிகள்! வெள்ளியங்கிரி உழவன்உற்பத்தியாளர் நிறுவனம் சாதனை

படிப்படியாக மந்திர உச்சாடனைகளுடன் அவர்கள் நிகழ்த்திய அந்த செயல்முறை சக்திநிலையில் பிரம்மாண்ட தன்மையை அந்த சூழலில் உருவாக்கியது. மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த செயல்முறை 9 மணி வரை நடைபெற்றது. இதை தொடர்ந்து ஆதியோகி திவ்ய தரிசனமும், சயன ஆரத்தியும் நடைபெற்றது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios