Asianet News TamilAsianet News Tamil

கிராமப்புற இளைஞர்களை சி.இ.ஓ.க்களாக உருவாக்க வேண்டும்..! வர்த்தக தலைவர்களின் கருத்தரங்கில் சத்குரு வலியுறுத்தல்

“வேலை தேடி மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்வதை தடுக்க கிராமங்களில் தொழில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். அங்குள்ள இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து நிறுவனங்களின் சி.இ.ஓக்களாக வளர்த்தெடுக்க வேண்டும்” என்று வர்த்தக தலைவர்களிடம் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வலியுறுத்தினார்.
 
sadhguru wants to make village youngsters as chief executive officers
Author
Coimbatore, First Published Jun 14, 2021, 4:32 PM IST

“வேலை தேடி மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்வதை தடுக்க கிராமங்களில் தொழில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். அங்குள்ள இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து நிறுவனங்களின் சி.இ.ஓக்களாக வளர்த்தெடுக்க வேண்டும்” என்று வர்த்தக தலைவர்களிடம் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வலியுறுத்தினார்.

ஈஷா லீடர்ஷிப் அகாடமி சார்பில் ‘Human is not a Resource என்ற வருடாந்திர கருத்தரங்கு ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. இதில் 11 நாடுகளைச் சேர்ந்த 150 வர்த்தக தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த வர்த்தக கலந்துரையாடலில் சத்குரு பேசியதாவது: 

உலகம் முழுவதும் உள்ள தொழில் முதலீடுகளில் பெரும் பகுதி 25 முதல் 30 முக்கிய நகரங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படுகிறது. இதனால், 160 கோடி (1.6 பில்லியன்) மக்கள் வேலை வாய்ப்பிற்காக நகரங்களுக்கு இடம்பெயர வேண்டி உள்ளது.

sadhguru wants to make village youngsters as chief executive officers

மக்கள் எங்கு வாழ்கிறார்களோ, அங்கு தான் தொழில் வளர்ச்சி நடக்க வேண்டும். தொழில் வளர்ச்சிக்காக மக்களை இடம்பெயர செய்வது சரியான முறை அல்ல.

எனவே, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, கிராமப்புறங்களில் தொழில் வாய்ப்புகளை அதிகளவு உருவாக்க வேண்டும். அதற்கு, நீங்கள் உங்கள் நிறுவனத்தின் மொத்த முதலீட்டில் குறைந்தப்பட்சம் 10 முதல் 15 சதவீதத்தையாவது கிராமங்களில் முதலீடு செய்ய வேண்டும்.

தொழில் துறையின் தேவைக்கேற்க அந்தந்த கிராமங்களில் உங்கள் நிறுவனத்தின் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை அமைத்து இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அவர்களுக்குள் மறைந்து இருக்கும் திறமைகளை கண்டறிருந்து உங்கள் நிறுவனத்தின் சி.இ.ஓக்களாக உயரும் அளவிற்கு அவர்களை வளர்தெடுக்க வேண்டும்.

sadhguru wants to make village youngsters as chief executive officers

மனிதர்களின் அனைத்து செயல்பாடுகளிலும் மனித தன்மை கொண்ட இதுபோன்ற அம்சங்கள் மிகவும் அவசியம் என்று சத்குரு கூறினார்.

வேலைவாய்ப்பிற்காக நகரங்களுக்கு இடம்பெயர்ந்த கோடிக்கணக்கான மக்கள் கரோனா காலத்தில் சந்தித்த அவலங்கள் இங்கு நினைவு கூறத்தக்கது. சத்குரு கூறுவது போல், கிராமப்புறங்களில் தொழில் வாய்ப்புகளை விரிவுப்படுத்துவதன் மூலம் இதுபோன்ற துயரங்களையும், பாதிப்புகளையும் நம்மால் குறைக்க முடியும்.

முன்னதாக, இந்த 3 நாள் ஆன்லைன் கலந்துரையாடல் நிகழ்வில், தென் மேற்கு பிராந்தியத்தின் முன்னாள் ராணுவ தளபதி லெப்டினெண்ட் ஜெனரல் திரு. அலோக் லேர், இண்டிகோ நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் திரு.ராஜ் ராகவன் உள்ளிட்ட வர்த்தக தலைவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினர்.
 
Follow Us:
Download App:
  • android
  • ios