Asianet News TamilAsianet News Tamil

மண் வளப் பாதுகாப்பு குறித்து இலங்கை அதிபருடன் சத்குரு கலந்துரையாடல்

உலக பருவநிலை மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை அதிபர் திரு. ரணில் விக்ரமசிங்கே அவர்களுடன் சத்குரு மண் வளப் பாதுகாப்பு குறித்து நேரில் கலந்துரையாடினார்.
 

Sadhguru had a  discussion with the President of Sri Lanka on soil conservation dee
Author
First Published Dec 5, 2023, 7:01 PM IST

உலக பருவநிலை மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை அதிபர் திரு. ரணில் விக்ரமசிங்கே அவர்களுடன் சத்குரு மண் வளப் பாதுகாப்பு குறித்து நேரில் கலந்துரையாடினார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இலங்கை அதிபர் திரு. ரணில் விக்ரமசிங்கே அவர்களுடன் மண் வளத்தை பாதுகாப்பது குறித்தும், வெப்பமண்டல நிலப் பகுதிகளில் அதன் தொடர்பு குறித்தும் ஒரு அர்த்தமுள்ள கலந்துரையாடல் நிகழ்த்தினேன். இவ்விஷயத்தில் சரியாக கவனம் செலுத்துவதன் மூலம், இலங்கையின் வளமான மண் மற்றும் பொருத்தமான பருவநிலையால், அந்நாட்டிற்கும், அந்நாட்டு விவசாயிகளுக்கும் ஒரு வளமான சூழலை உருவாக்க முடியும்” என பதிவிட்டுள்ளார்.

 


சுற்றுச்சூழல் ரீதியாக அதிக முக்கியத்துவம் வாய்ந்த உலக பருவநிலை மாநாடு தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் மண் காப்போம் இயக்கத்தின் நிறுவனர் சத்குரு அவர்களும் கலந்து கொண்டு மண் வளப் பாதுகாப்பு குறித்து பல்வேறு அமர்வுகளில் சிறப்புரையாற்றி வருகிறார்.

முன்னதாக, பாரத பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் காலநிலை அமைச்சர் மரியம் அல்மெய்ரி, இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உட்பட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்ற தொடக்க விழா நிகழ்விலும் சத்குரு பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios