சவுக்கு சங்கர் மீது போக்சோ வழக்கு போடுங்க.. திடீர் போராட்டத்தால் பரபரப்பு

ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் மீது போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய  வலியுறுத்தி போராட்டம் இன்று நடைபெற்றது.

protest was demanding registration of a case under the POCSO Act against journalist savukku shankar

தனது சுயலாபத்திற்காகவும், சுய விளம்பரத்திற்காகவும் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் சமூக ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் அண்மைக்காலமாக விமர்சித்து வருவதாகவும், அவர் தமிழ் சமூகத்தையும், பெண்களையும், குழந்தைகளையும் தனது வீடியோக்களில் இழிவு படுத்தி வருகிறார் சவுக்கு சங்கர்.

நீதித்துறை மாண்பை கெடுக்கும் வகையிலும் காவல்துறையை விமர்சித்தும் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வரும் சவுக்கு சங்கரை கண்டித்து நேதாஜி மக்கள் இயக்கம் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

protest was demanding registration of a case under the POCSO Act against journalist savukku shankar

இதையும் படிங்க..Google Diwali 2022: தீபாவளிக்கு கூகுள் கொடுத்த அசத்தல் ‘சர்ப்ரைஸ்’! மறக்காம இதை ட்ரை பண்ணி பாருங்க மக்களே!

நீதிமன்ற அவமதிப்பு காரணமாக கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கரின் வலைதள பக்கத்தையும், youtube பக்கத்தையும் உடனடியாக முடக்கி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சவுக்கு சங்கர் மீது போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற ஏதேச்சதிகார போக்கில் அவர் வெளியிட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி இன்று பலரது மனதை புண்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க..ராணுவ வீரர்களுக்கு வயாகரா கொடுக்கும் ரஷ்யா.. பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் உக்ரைன் பெண்கள்! அதிர்ச்சி தகவல்!

protest was demanding registration of a case under the POCSO Act against journalist savukku shankar

அமைதியாக இருக்கும் தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் அவரது வீடியோக்கள் அமைந்துள்ளதால் சவுக்கு சங்கரின் சமூக வலைதள பக்கத்தை முடக்குவதன் மூலமாக மட்டுமே அந்த வீடியோக்கள் மேலும் பரவுவதை தடுக்க இயலும் என்பதால் உடனடியாக அந்த வீடியோக்களை வலைதள பக்கத்திலிருந்து அழிப்பதுடன் சவுக்கு யூடியூப் பக்கத்தையும்  முடக்க காவல்துறையும் அரசும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க..சாதி பார்க்கும் சசிகலா.? எல்லாத்துக்கும் அதிமுகவின் ‘அந்த’ 4 பேர் காரணம் - புலம்பும் அதிமுகவினர்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios