கோவை மாவட்டம் டவுன்ஹால் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய 4 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை டவுன்ஹால் இடையர் வீதியில் நேற்று இரவு வட மாநில தொழிலாளர்களை மர்ம நபர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் 100-க்கு மேற்பட்டோர் கூடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அக்கூட்டத்தை களையச் செய்து போக்குவரத்தை சீர் செய்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பின்னர் இது குறித்து கௌதம் ஷாமல் கட்டுவா என்பவர் அளித்த புகாரின் பேரில் வெரைட்டி ஹால் காவல் துறையினர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதில் இடையர் வீதி பகுதியைச் சேர்ந்த சூரியபிரகாஷ், பிரகாஷ், பிரகதீஸ்வரன், வேல்முருகன் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென தீ குளிக்க முயன்றவர்களால் பரபரப்பு

அவர்களிடம் தாக்குதல் சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று இரவு அப்பகுதியில் நடந்து வரும் போது, கைது செய்யப்பட்டுள்ளவர்கள் வேண்டுமென்றே வாய்வார்த்தையில் கெளதமின் நண்பரை திட்டி வாக்குவாதம் செய்து தாக்கியதாகவும், மேலும் அவர்கள் இருக்கின்ற காந்திபார்க் இடத்திற்கு சென்று தாக்குதல் நடத்தியதாகவும் கூறபடும் நிலையில் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளம் பெண்ணுக்கு கடன் கொடுத்து உதவுவது போல் பாலியல் தொல்லை: விஏஓ கைது