சென்னை-கோவை இடையில் குளிர்சாதன வசதி கொண்ட புதிய ரயில் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதையேற்று தற்போது குளிர்சாதன அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் நண்பகல் 12.45 மணியளவில் சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 2 மணிக்கு கிளம்பும் ஏ.சி ரயில் இரவு 10 மணியளவில் கோவையை சென்றடையும். அதிவிரைவு ரயிலான இதில் ஏ.சி. எக்சிகியூட்டிவ் சேர்கார் பெட்டிகள் இரண்டும், ஏ.சி. சேர்க்கார் பெட்டிகள் ஐந்தும் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் ஜெனரேட்டருடன் கூடிய சரக்கு பெட்டிகள் இரண்டு என மொத்தம் 9 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.இதை ரயில் இடையில் பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில் சேவை ஜனவரி 24ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவுகள் இன்று தொடங்குகிறது.

Also Read:  அதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை..! பழிக்குப்பழியாக தீர்த்து கட்டிய மர்மகும்பல்..!