Asianet News TamilAsianet News Tamil

ஈஷாவில் இனிதே தொடங்கியது நவராத்திரி திருவிழா..! தினமும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு களிக்கலாம்

நம் வாழ்வின் ஒரு அங்கமாக விளங்கும் பெண் தன்மையை கொண்டாடும் நவராத்திரி திருவிழா கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று (செப்.26) கோலாகலமாக தொடங்கியது. 
 

navratri celebrations begins at isha
Author
First Published Sep 27, 2022, 7:11 PM IST

நம் வாழ்வின் ஒரு அங்கமாக விளங்கும் பெண் தன்மையை கொண்டாடும் நவராத்திரி திருவிழா கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று (செப்.26) கோலாகலமாக தொடங்கியது. 

நம் கலாச்சாரத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் அனைத்துமே தனி மனிதனின் உள்நிலை வளர்ச்சிக்கான கருவியாகவே அமைகிறது. அந்த வகையில், நவராத்திரி திருவிழா தனிச் சிறப்புமிக்க ஒரு கொண்டாட்டமாகும். ஈஷாவில் உள்ள லிங்கபைரவி தேவியின் எல்லையில்லா அருளையும் சக்தியையும் உணர நவராத்திரி நாட்கள் மிகச் சிறந்த காலகட்டமாய் உள்ளது.

இதையும் படிங்க - சுற்றுச்சூழல் அனுமதி விதியில் இருந்து ஈஷாவுக்கு விலக்கு.. மத்திய அரசு சொன்ன புது தகவல் !

அந்த வகையில், நவராத்திரியின் முதல் நாளான நேற்று லிங்கபைரவி தேவி துர்கையின் அம்சத்தை குறிக்கும் விதமாக குங்கும அபிஷேகத்தில் பக்தர்களுக்கு
அருள்பாலித்தார். மாலையில் தேவியின்
உற்சவ மூர்த்தி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு நந்தியின் முன் மஹா ஆரத்தி நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

இதேபோல், லிங்க பைரவி தேவி செப்.29 முதல் அக்.1 வரை லட்சுமியின் அம்சத்தை குறிக்கும் விதமாக மஞ்சள் அபிஷேகத்திலும், அக்.2 முதல் 4 வரை சரஸ்வதியின் அம்சத்தை குறிக்கும் விதமாக சந்தன அபிஷேகத்திலும் காட்சியளிப்பார். மேலும், செப்.29 மற்றும் அக்.2 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு மஹா ஆரத்தி நடைபெறும்.

இதையும் படிங்க - காவேரி கூக்குரல் இயக்கம் தேசத்திற்கே வழிகாட்டி..! ‘பசுமை தொண்டாமுத்தூர்’ விழாவில் பொள்ளாச்சி எம்.பி. பாராட்டு

இதுதவிர, இவ்விழாவை மேலும் சிறப்பிக்கும் விதமாக பாரம்பரிய இசை மற்றும் நடன கலைஞர்களின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் தினமும் மாலை 6.30 மணி முதல் 7.45 மணி நடைபெறும். முதல் நாளான நேற்று ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் ‘த்ரிநயணி’ என்ற பெயரில் ஒரு அற்புதமான இசை நிகழ்ச்சியை நடத்தினர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios