Asianet News TamilAsianet News Tamil

அமைச்சர் செங்கோட்டையனின் அதிபயங்கர அறிவிப்பு!! துள்ளி குதிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்...

அரசு பள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச 2 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட சிடி விரைவில் கொடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
 

Minister sengottaiyai mega announcement
Author
Coimbatore, First Published Aug 17, 2019, 3:53 PM IST

அரசு பள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச 2 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட சிடி விரைவில் கொடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

கோபியில் பள்ளிக்கல்வி துறைஅமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்திக்கையில்; இந்த அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. 15 லட்சத்து 75 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2000 வழங்கும் பணி விரைவில் நடைபெற உள்ளது. அடுத்த வருடம் முதல் மாணவர்களுக்கு "ஷூ" கொடுக்கப்படும்.

க்யூ.ஆர். கோடு மூலமாக பாடங்களை மாணவ, மாணவிகள் படிக்கும் திட்டம் இந்தியாவிலேயே முதன் முதலாகதுவங்கப்பட்டுள்ளது.பள்ளி  மாணவர்களுக்கு பாடங்களை கற்றுத் தருவதற்காக ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இனி அரசு பள்ளி மாணவர்கள் நுனி நாக்கில் சரளமாக இங்கிலீஷில் பேச 2000 வார்த்தைகள் கொண்ட சிடி தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அதை கொடுக்கப்படும். 

தற்காலிக ஆசிரியர்களை நியமனத்தில் குளறுபடி இருக்குமானால் புகார் கொடுத்தால் அதன் பேரில், நடவடிக்கை எடுக்கப்படும். 100 அரசு பள்ளிக் கூடங்களில் தலா ரூ.2.50 கோடி செலவில் அவுட்டோர் ஸ்டேடியம் மத்திய அரசு அனுமதியுடன் அமைக்கப்படும். கோபியை தலைநகரமாகக் கொண்டு மாவட்டம் உருவாக்க வேண்டும் என சிலர் பேசி வருகிறார்கள். 

நான் கோபியைச் சேர்ந்தவன். எனக்கு கோபியை தலைநகரமாகக் கொண்டு ஒரு மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை உண்டு. ஆனால், அதை அமைப்பதற்கு 100 ஏக்கர் நிலம் தேவை. எல்லா மாவட்டத்தையும் பிரிப்பது தான்அரசின் நோக்கமாக உள்ளது என்று இவ்வாறு அவர் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios