கோவை விமான நிலையத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் விற்பனைக் கூடம் அமைச்சர் பெரிய கருப்பன் திறப்பு!!
கோவை விமான நிலையத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் சார்பில் தொடங்கப்பட்டுள்ள விற்பனை கூடத்தை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன் இன்று திறந்து வைத்தார்.
கோவை விமான நிலையத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் சார்பில் விற்பனைக் கூடம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு தேவையான பருப்பு பொடி, எண்ணெய், கைவினைப் பொருட்கள், வீட்டு முறையில் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகள் உள்ளிட்டவை இந்தக் கடையில் இடம்பெற்றுள்ளன. இந்தக் கடையை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன் இன்று திறந்து வைத்தார். இவருடன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் சமீரன், மேயர் கல்பனா, ஊரக வளர்ச்சி துறை செயலாளர் அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ''ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் நடைபெற்று வரும் பணிகள், மக்கள் பிரதிநிதிகளின் தேவைகள், எதிர்பார்ப்புகளை மாவட்டந்தோறும் கேட்டறிந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். நேற்று ஈரோடு மாவட்டத்திலும், இன்று கோவை மாவட்டத்திலும் ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளோம். கோவையில் இன்னும் பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தும், முடிக்கப்பட்ட பணிகளை திறந்து வைத்தும் வருகிறோம்.
மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்களை இதுவரை வீதிகளில், கிராமங்களில் விற்று வந்தனர். தற்போது கோவை விமான நிலையத்தில் விற்கும் அளவிற்கு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. எல்லா வகையிலும் அவர்களின் தயாரிப்புகள் தரமானதாக உள்ளன.
உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்பதே ஸ்டாலினின் கொள்கை… எஸ்.பி.வேலுமணி விமர்சனம்!!
கோவை மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யக்கூடிய பல்வேறு வகையான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் இது போன்ற விற்பனை அரங்குகளை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்'' என்றார்.