கோவை மாவட்டம் ஆனைமலைச் சேர்ந்தவர் கனக சுப்பிரமணியன்(26 ). கூலித்தொழிலாளியான இவர் கிடைக்கும் வேலைகளை செய்து வந்திருக்கிறார். 

நேற்று இரவு வேலையை முடித்து விட்டு இவர் வீடு இருக்கும் பகுதி வழியாக நடந்து சென்றிருக்கிறார். அப்போது ஒரு வீட்டின் வாசலில் பானு(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற பெண் நின்று கொண்டிருந்தார்.

கனக சுப்புரத்தினம் அவரிடம் பேச்சு கொடுக்க முயன்றிருக்கிறார். அதை தவிர்த்து உள்ளே செல்ல முயன்ற பானுவை விடாமல் மேலும் பேசியிருக்கிறார். ஒரு கட்டத்தில் அவரின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார் கனக சுப்புரத்தினம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பானு கூச்சல் போட்டிருக்கிறார். உடனே உஷாரான அவர் பானுவை தாக்கி விட்டு அங்கிருந்து  தப்பி ஓடி விட்டார்.

உடனடியாக காவல் நிலையம் சென்ற பானுவும் அவர் குடும்பத்தினரும் கனக சுப்புரத்தினம் மீது புகார் அளித்தனர். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறை பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல், தாக்குதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

தலைமறைவாக இருந்த கனக சுப்புரத்தினத்தை வலைவீசி தேடி வந்த காவலர்கள் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.