பொள்ளாச்சியில் மீண்டும் ஊருக்குள் வந்த மக்னா யானை; பொதுமக்கள் அச்சம்
தர்மபுரி மாவட்டத்திலிருந்து கடந்த 5ம் தேதி பிடிக்கப்பட்டு பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் வன பகுதியில் விடப்பட்ட மக்னா காட்டு யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்தது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் மக்னா காட்டு யானை ஒன்று ஊருக்கு வந்து அட்டகாசம் செய்து வந்தது. இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சியை அடுத்த கோழிகமுத்தி முகாமில் இருந்து கும்கி யானை சின்ன தம்பி மற்றும் குழுவினர் கடந்த கடந்த 5ம் தேதி யானையை பிடித்தனர்.
பின்னர், டாப்சிலிப் அருகே உள்ள வரகளியார் வனப்பகுதியில் 6ம் தேதி யானை விடப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் தனி குழு அமைத்து அந்த மக்னா காட்டு யானையை கண்காணித்து வந்தனர்.
குமரியில் ஓரினசேர்க்கைக்காக வடமாநில இளைஞர் கடத்த முயற்சி; கத்தி, கூச்சலிட்டதால் தப்பி ஓட்டம்
இந்த நிலையில் நேற்று இரவு யானை வனத்தை விட்டு வெளியேறி சேத்துமடை கிராமம் வழியாக நுழைந்து, நல்லூத்துக்குளி, கா.க.புதூர், ஆத்து பொள்ளாச்சி, உள்ளிட கிராமங்களை கடந்து, தற்போது மன்னூர் ராமநாதபுரம் கிராமத்தில் உள்ளது.
பொள்ளாச்சி வனச்சரக அதிகாரிகள் 2 குழுக்களாக பிரிந்து யானையின் நகர்வை கண்காணித்து வருகின்றனர். தென்னந்தோப்பு பகுதிகளில் யானை நடமாடி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காட்டு யானையை விரைந்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.