கோவை வெள்ளியங்கிரி மலை கோவிலில் இன்று முதல் பக்தர்கள் அனுமதி

மகா சிவராத்திரியை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலைக்கு இன்று முதல் 20 ம் தேதி வரை பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்து உள்ளது.

mahashivratri 2023 velliangiri hills opened for devotees in coimbatore

கோவை மாவட்டம் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலை ஒட்டி உள்ள மலை தொடரில் ஏழாவது மலையில் சுயம்பு லிங்கத்தை தரிசிக்க மார்ச் முதல் மே மாதம் வரையில்  மூன்று மாதங்கள் மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று முதல் 20ம் தேதி வரை பக்தர்கள் மலைக்குச் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. கோவை மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மலைக்கு புனித பயணம் செல்ல உள்ளனர். 

mahashivratri 2023 velliangiri hills opened for devotees in coimbatore

மலை ஏறும் பக்தர்கள் பிளாஸ்டிக் கொண்டு செல்வதை தடுக்க பணியாளர்கள், தன்னார்வலர்கள் என 200 க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, சிவராத்திரிக்கு ஒரு லட்சம் பக்தர்கள் மலை ஏறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பைகள் மற்றும் பொருட்களை சோதனை செய்த பின்னரே அவர்கள் அனுமதிக்கப் படுவார்கள். எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களை மலைப் பகுதிக்கு கொண்டு செல்ல கூடாது என்றனர்.

போனில் வந்த லிங்கை கிளிக் செய்தவருக்கு; 1 லட்சம் கடன் பெற்றதாக வந்த செய்தியால் அதிர்ச்சி

மேலும் வெள்ளிங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை வனத்திற்குள் வீசுவதை தவிர்ப்பதற்காக வனத்துறை புதிய திட்டம் வகுத்துள்ளது. அதாவது கொண்டுவரும் தண்ணீர் பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு முன்பணமாக பத்து ரூபாய் பெறப்பட்டு விடும். திரும்பும் பக்தர்கள்   பாட்டில்களில் ஒட்டியுள்ள ஸ்டிக்கரை கொடுத்துவிட்டு அந்த பணத்தை திரும்பி பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios