பிரபல பாலிவுட் நடிகர் பெயரை பயன்படுத்தி, தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் மோசடியில் ஈடுபட்ட, மஹேந்திரவர்மன் என்கிற நபரை போலீசார் மூன்று வழக்குகளின் கீழ், கைதுசெய்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரிக்க... அதிகரிக்க.., அதன் மூலம் பல்வேறு மோசடிகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, பல்வேறு விழிப்புணர்வுகள் கொடுக்கப்பட்டுள்ள, சில சமயங்களில் பலர் ஏமாந்து விடுகிறார்கள்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் 'அர்மார் மாலிக்' பெயரை பயன்படுத்தி, சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பெண்களிடம் மோசடியில் ஈடுபட்டு வந்த மஹேந்திர வர்மன் என்கிற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையை சேர்ந்த இவர், பாலிவுட் நடிகர் அர்மான் மாலிக் பெயரை பயன்படுத்தி பல பெண்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக பேசி , பணம் பறிப்பது, ஏமாற்றுவது என பல்வேறு மோசடியில் ஈடுபட்டு வந்தார். இதுகுறித்து பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பெயரின் போலீசார் இவர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.