தமிழ்நாடு முழுவதும் மருத்துவப் பணியாளர்களுக்கு துணை நிற்கும் ஈஷா!

சென்னை, கோவை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு உணவு, சிற்றுண்டி போன்றவற்றை ஈஷா வழங்கி வருகிறது.
 

isha foundation extends their support to health workers in covid pandemic

கொரோனா 2-வது அலையின் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த சவாலான சூழலில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இரவு பகலாக தொடர்ந்து சேவையாற்றி வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, உணவு மற்றும் சிற்றுண்டிகளை வழங்க ஈஷா முடிவு செய்தது.

அதன்படி, சென்னை ஓமந்துரார் மருத்துவமனையில் பணியாற்றும் 400 மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு 15 நாட்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. மேலும், ஸ்டான்லி மருத்துவமனை பணியாளர்களுக்கும் சேர்த்து 6,900 சிற்றுண்டி பாக்கெட்கள் வழங்கப்பட்டன.

isha foundation extends their support to health workers in covid pandemic

அதேபோல், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு 20,520 சிற்றுண்டி பாக்கெட்களும் வழங்கப்பட்டன. மேலும், திண்டுக்கல், தஞ்சாவூர், கடலூர், வேலூர் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டன. தர்மபுரி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் இன்னும் ஓரிரு தினங்களில் வழங்கப்பட உள்ளது.

முன்னதாக, புதுச்சேரியில் பணியாற்றும் முன் களப் பணியாளர்களுக்கான சிற்றுண்டி பாக்கெட்கள் துணை நிலை ஆளுநர் திருமதி. தமிழிசை சவுந்தரராஜன் அவர்களிடம் நேரில் வழங்கப்பட்டது.

isha foundation extends their support to health workers in covid pandemic

இது தவிர, கோவையில் 43 கிராமங்களை தத்தெடுத்து கொரோனா நிவாரணப் பணிகளை ஈஷா மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios