Asianet News TamilAsianet News Tamil

அரசு அலுவலகத்தில் மோடி படத்தை வைத்துவிட்டு மிரட்டல்.. வீடு புகுந்து பாஜக நிர்வாகியை அலேக்கா தூக்கிய போலீஸ்.!

கோவை அருகே உள்ள பூலுவப்பட்டியில் பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் காலை பாஜக அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் சிலர் அத்துமீறி நுழைந்தனர். பின்னர், அவர்கள் பிரதமர் மோடியின் உருவ படத்தை அலுவலகத்தில் மாற்ற வற்புறுத்தி அங்குள்ள அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Intimidation of employees for leaving Modi photo in municipal corporation office..Police arrested Baskaran and remanded
Author
Coimbatore, First Published Jan 24, 2022, 11:38 AM IST

கோவையில் பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடியின் படத்தை வைத்துவிட்டு அரசு ஊழியர்களை மிரட்டிச் சென்ற பாஜக நிர்வாகி பாஸ்கரன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

கோவை அருகே உள்ள பூலுவப்பட்டியில் பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் காலை பாஜக அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் சிலர் அத்துமீறி நுழைந்தனர். பின்னர், அவர்கள் பிரதமர் மோடியின் உருவ படத்தை அலுவலகத்தில் மாற்ற வற்புறுத்தி அங்குள்ள அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி சுவரில் மாட்டப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தின் அருகே பிரதமர் மோடியின் உருவப்படத்தை அவர்கள் மாட்டினர்.

Intimidation of employees for leaving Modi photo in municipal corporation office..Police arrested Baskaran and remanded

அப்போது, ஊழியர்கள் அனுமதியின்றி பேரூராட்சி அலுவலகத்திற்குள் வந்து புகைப்படம் மாட்டுவது தவறு என்றும், மாஸ்க் அணியாமல் வரக்கூடாது என்றும் சுட்டிக்காட்டினர். இதனால் பாஜகவினருக்கும், பேரூராட்சி அலுவலக ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி வைக்கப்பட்டு உள்ள நிலையில், பிரதமர் மோடியின் படம் வைக்க வேண்டும் என்றும், மோடியின் புகைப்படத்தை கழற்றினால் அதற்கு திமுக தான் காரணம் எனவும் தெரிவித்தனர்.

Intimidation of employees for leaving Modi photo in municipal corporation office..Police arrested Baskaran and remanded

மேலும், பிரதமர் புகைப்படத்தை கழற்றினால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் பாஜகவினர் மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த விவகாரம் தொடர்பாக அரசு அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து,  சாரா தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரனை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், பாஸ்கரனுடன் வந்த பாஜனவினர் 9 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios