100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா மாபெரும் சாதனை.. சத்குரு வாழ்த்து..!
நாட்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கடந்த ஜனவரி 16ம் தேதி மத்திய அரசு கொண்டு வந்தது. தொடக்கத்தில் தடுப்பூசி மீதான பயம் காரணமாக அதனை செலுத்தி கொள்வதில் பொதுமக்கள் தயக்கம் காட்டினர். பின்பு ஆர்வமுடன் பொதுமக்கள் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மாநில அரசுகளும் சிறப்பு முகாம்கள் அமைத்து மக்களை தடுப்பூசி செலுத்த ஊக்குவித்தன.
100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா அபார சாதனை படைத்துள்ளதற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கடந்த ஜனவரி 16ம் தேதி மத்திய அரசு கொண்டு வந்தது. தொடக்கத்தில் தடுப்பூசி மீதான பயம் காரணமாக அதனை செலுத்தி கொள்வதில் பொதுமக்கள் தயக்கம் காட்டினர். பின்பு ஆர்வமுடன் பொதுமக்கள் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மாநில அரசுகளும் சிறப்பு முகாம்கள் அமைத்து மக்களை தடுப்பூசி செலுத்த ஊக்குவித்தன.
மக்களை பாதுகாப்பதில் சுகாதாரத்துறை ஊழியர்கள் கடுமையாக உழைக்க, மக்களும் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கவே இந்தியா 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது. இதற்கு உலக சுகாதார அமைப்பும் 100 கோடி தடுப்பூசி சாதனையை நிறைவேற்றிய இந்தியாவை பாராட்டியுள்ளது. மேலும், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டு மழை குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்த இந்தியாவுக்கு சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா அபார சாதனை படைத்துள்ளது. தங்களது தீவிர முயற்சிகளால் இதனை நிகழச்செய்த அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.