தற்கொலைகளை தடுப்பது குறித்து சத்குருவுடன் ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகள் கலந்துரையாடல்

சிறை கைதிகள் மற்றும் காவல் துறையினர் தற்கொலை செய்து கொள்வதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவுடன் இந்திய அளவில் உயர் பொறுப்பில் இருக்கும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கலந்துரையாடினர்.
 

ias and ips officers had discussion with sadhguru regarding how to stop suicides

சிறை கைதிகள் மற்றும் காவல் துறையினர் தற்கொலை செய்து கொள்வதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவுடன் இந்திய அளவில் உயர் பொறுப்பில் இருக்கும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கலந்துரையாடினர்.

அந்த கலந்துரையாடலில் சத்குரு பேசுகையில், “உங்கள் சொந்த புத்திசாலித்தனமே உங்களுக்கு எதிராக செயல்படும் மிக மோசமான நிலையே தற்கொலை ஆகும். ஆகவே, உலகில் உயிர் வாழ்வது தான் உச்சப்பட்ச மதிப்பான செயல் என்பதை உணரும் சமூகத்தையும் கலாச்சாரத்தையும் நாம் உருவாக்க வேண்டும். மனிதர்களின் உள் அனுபவமானது வெளியில் இருந்து சேகரித்த விஷயங்களில் அடிமையாகாமல், வாழ்வின் அடிப்படை அம்சங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். இதற்கு யோக பயிற்சிகள் உங்களுக்கு உதவி புரியும்.

யோகா மூலம் ஒருவர் தனக்குள் மகிழ்ச்சிக்கான வேதியியல் மாற்றங்களை தானே உருவாக்கி கொள்ள முடியும். இது சமூகம் கட்டமைத்துள்ள வெற்றி கோட்பாடுகள் அல்லது மதிப்பீடுகளுக்குள் சிக்கி உணர்ச்சி சமநிலையை இழக்காமல் அவர்களை பாதுகாக்கும்.

நாட்டில் இருக்கும் சட்டங்கள் மூலம் சட்டத்தை மீறுபவர்களை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். அவர்களுக்குள் உள்நிலை மாற்றத்தை உருவாக்க முடியாது. ஆனால், யோக பயிற்சிகள் மூலம் ஒருவர் தான் விரும்பும் உணர்வை தனக்குள் உருவாக்கி கொள்ள முடியும்.

ias and ips officers had discussion with sadhguru regarding how to stop suicides

இதை சாத்தியப்படுத்த சிறை கைதிகள் மற்றும் அதிகாரிகள், சட்ட அமலாக்க துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு தேசிய அளவில் யோகா வகுப்புகளை நடத்த ஈஷா தயாராக உள்ளது.

இதுதவிர, சிறைகளில் கலை மற்று கலாச்சார அம்சங்களை ஊக்குவிப்பதன் மூலம் அங்கு மென்மையான சூழலை உருவாக்கி சிறை கைதிகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்” என்றார்

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு போபாலில் உள்ள மத்திய காவலர் பயிற்சி மையம் (Central Academy for Police Training) மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Bureau of Police Research and Development) சார்பில் இந்த கலந்துரையாடல் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை மத்திய காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இயக்குநர் திரு.பாலாஜி ஸ்ரீவஸ்தவா ஐ.பி.எஸ். நெறியாள்கை செய்தார். சி.ஆர்.பி.எஃப் படை பிரிவின் இயக்குநர் திரு.குல்தீப் சிங் ஐ.பி.எஸ்., தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் இயக்குநர் திரு.சுனில் குமார் சிங் ஐ.பி.எஸ், உத்தர பிரதேச மாநிலத்தின் காவல் துறை இயக்குநர் திரு. முகுல் கோயல் ஐ.பி.எஸ், பீகார் சிறைகள் துறை ஐ.ஜி திரு.மித்திலேஷ் மிஸ்ரா, தெலுங்கானா Prosecution துறை இயக்குநர் திருமதி. மைஜெயந்தி ஆகியோர் தாங்கள் சந்திக்கும் சவால்கள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை சத்குருவிடம் கேட்டனர்.

சிறைவாசிகளின் நலனுக்காக, ஈஷா சார்பில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக தமிழக சிறைகளில் இலவச யோகா வகுப்புகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios