அடுத்த 24 மணிநேரத்தில் கோவை , நீலகிரி மாவட்டங்களில்  இடியுடன் கூடிய மிக கன மழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உள் மாவட்டங்களில் 24 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரியில் ஒரிர இடங்களில் இடியடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

வேலூர், திருவள்ளூர்,  திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி,  தர்மபுரி, சேலம், தஞ்சாவூர்,  திருவாரூர், நாகை, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அரியலூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகரில் மிதமான மழை பெய்யலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில், பாம்பனில் 12 செ.மீ, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 10 செ.மீ., சின்னக்கல்லாறில் 9 செ.மீ., மதுராந்தகம், செய்யாறு, ஆடுதுறை, செந்துறை, சேந்தமங்கலத்தில் தலா 7 செ.மீ., புதுக்கோட்டை, திருவிடைமருதூர், வால்பாறை, சென்னை தரமணியில் தலா 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.