மசினகுடி ஆட்கொல்லி புலியை பிடிக்க கர்நாடகத்தில் இருந்து வரவழைக்கப்படும் ராணா..!
2016-ல் கூடலூரில் ஆட்கொல்லி புலியை பிடிக்க உதவிய ராணா, கர்நாடகத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் உதவியுள்ளது.
2016-ல் கூடலூரில் ஆட்கொல்லி புலியை பிடிக்க உதவிய ராணா, கர்நாடகத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் உதவியுள்ளது.
நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே முகாமிட்டுள்ள ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணிகள் ஒன்பதாவது நாளாக நடைபெற்று வருகிறது. புலியை உயிருடன் பிடிக்க முடிவு செய்துள்ள வனத்துறையினர் பத்து குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். வேட்டை தடுப்பு காவலர்கள், மருத்துவக் குழுவினர் என குழு அமைத்து புலியை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.
அடர்வனம், புதர்களுக்குள் மறைந்து வனத்துறைக்கு போக்கு காட்டும் புலியை பிடிக்க ஏற்கெனவே வேட்டை நாய்கள், இரண்டு கும்கி யானைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. புலியை கண்டுபிடிக்கும் பணியில் நாட்டின நாய் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில் தான் ஆட்கொல்லி புலியை பிடிக்க கர்நாடகத்தில் இருந்து ராணா என்ற மோப்பநாயை வரவழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பந்திபூர் புலிகள் காப்பகத்தில் உள்ள ராணா என்ற மோப்ப நான் கடந்த 2016-ம் ஆண்டு கூடலூர் அருகே தேவர்சோலை பகுதியில் உலாவிய ஆட்கொல்லி புலியியை பிடிக்க உதவியிருக்கிறது. மேலும் கர்நாடாகாவில் புலிகளை பிடிக்கவும், மரக் கடத்தல்களை தடுப்பதிலும் ராணா சிறப்பாக செயலாற்றியிருக்கிறது. வேட்டை மன்னன் ராணா நாளை கூடலூருக்கு அழைத்து வரப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.