பெண் போலீசிடம் பாலியல் தொல்லை கொடுத்து அத்துமீறல்... கையும் களவுமாக சிக்கிய எஸ்.பி சஸ்பெண்ட்..!
தற்போது பணிபுரியும் நீலகிரி மாவட்டத்திலேயே கூடுதல் எஸ்.பி சார்லஸ் தங்கியிருக்க வேண்டும், அரசு அனுமதியில்லாமல், வேறு எங்கும் செல்ல கூடாது என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின் அடிப்படையில், நீலகிரி மாவட்ட கூடுதல் எஸ்.பி சார்லஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக (கூடுதல் எஸ்.பி) பணியாற்றி வருபவர் சார்லஸ். இவர், இதற்கு முன்னர், ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் எஸ்.பியாக பணியாற்றி வந்தார். அப்போது, அங்கு பணியாற்றிய பெண் காவலரிடம், கூடுதல் எஸ்.பி. சார்லஸ், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட பெண் காவலர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில், விசாரணை நடைபெற்றது. இதில், தவறு நடந்திருக்க முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில், தற்போது நீலகிரி மாவட்ட கூடுதல் எஸ்.பியாக இருக்கும் சார்லசை சஸ்பெண்ட் செய்து, கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டார். இந்த சஸ்பெண்ட் உத்தரவு கோவை சரக டிஐஜி. வாயிலாக, நீலகிரி மாவட்ட எஸ்.பி நேற்று கூடுதல் எஸ்.பி. சார்லசிடம் வழங்கினார்.
மேலும், தற்போது பணிபுரியும் நீலகிரி மாவட்டத்திலேயே கூடுதல் எஸ்.பி சார்லஸ் தங்கியிருக்க வேண்டும், அரசு அனுமதியில்லாமல், வேறு எங்கும் செல்ல கூடாது என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.