கோயம்புத்தூரில் தங்க நகை பட்டறையில் ஒரு கிலோ தங்க கட்டிகள் கொள்ளை; வைரல் வீடியோ!!

கோயம்புத்தூரில் தங்க நகை பட்டறையில் இருந்து ஒரு கிலோ தங்கம் கொள்ளையடித்துச் சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.  

employees in Coimbatore jewelry workshop absconded with one kg of gold bar

கோயம்புத்தூர் ராஜ வீதி அடுத்த சண்முகா நகர் பகுதியில் மோகன் டை என்ற பெயரில் மோகன் குமார்(45) தங்க நகைகள் செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக தங்க நகை கடைகள் மற்றும் மொத்த வியாபாரமாக தங்க நகைகளை செய்து கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் இவரிடம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத் வித்தால் போச்லே (20 ) என்பவர் பணியில் சேர்ந்தார். பிரமோத் வித்தால் நேற்று காலை 8.30 மணியளவில் பட்டறைக்கு சென்றுள்ளார். பட்டறைக்கு மற்ற ஊழியர்களும், உரிமையாளரும் பணிக்கு வராத நிலையில் கடையின் சாவியை எடுத்து கடையில் இருந்த ஒரு கிலோ அளவிளான தங்க நகை மற்றும் கட்டிகளை திருடிக் கொண்டு தப்பியோடியுள்ளார். 

கோவையில் கட்டு கட்டாக 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்கோவையில் கட்டு கட்டாக 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்

கடையின் சாவியை வைக்கும் இடத்தையும், கடை திறக்கும் நேரத்தையும் அறிந்து வைத்துள்ளார். இந்த சம்பவம் கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.  இதனையடுத்து வெரைட்டிஹால் காவல் நிலையத்தில் மோகன் குமார் அளித்த புகாரில் 50 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 1067.850 கிராம் தங்க நகைகள்மற்றும் தங்க கட்டிகள் திருடுபோனதாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

மேலும் நகையை திருடியவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் காவல்துறை தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். நகை திருடிக்கொண்டு சொந்த ஊர் சென்றுயிருப்பாரா?? நகையை வேறு யாரிடமாவது விற்பனை செய்து இருப்பாரா அல்லது முயற்சித்து வருவாரா? கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது நகையை திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரசவ வலியால் துடித்த பெண்… ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை… பின்னர் நடந்தது என்ன?பிரசவ வலியால் துடித்த பெண்… ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை… பின்னர் நடந்தது என்ன?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios