Clay Fridge : மின்சாரமில்லா களிமண் குளிர்சாதன பெட்டி!- 7 நாட்கள் வரைக்கும் கெட்டுபோகமல் இருக்கும் காய்கறிகள்!

உடல் ஆரோக்கியத்தை காக்கும் களிமண் குளிர்சாதன பெட்டி, காய்கறிகளின் சத்துகளை உறிஞ்சாமல் 10 நாட்கள் வரை பாதுகாக்கும் என தெரிவிக்கிறார் அதன் விற்பனையாளர் கனகராஜ்!
 

Electric power-free Clay refrigerator!- Vegetables that do not spoil up to 7 days!

கோவையில், தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி, உணவு, காய்கறிகள் மற்றும் பால் போன்றவற்றை இயற்கையாகவே பல நாட்கள் வைத்திருக்க முடியும் என்கிறார் களிமண் குளிர்சாதனப் பெட்டி தயாரிப்பாளர் கனகராஜ், மேலும் இந்த குளிர்சாதன பெட்டி குறித்து அவர் கூறுகையில்

குளிர்சாதன பெட்டி வெள்ளை களிமண்ணால் ஆனது மற்றும் வழக்கமான பராமரிப்பு தேவையை நீக்கும் ஒரு எளிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது. தினமும் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றினால் போதுமானது. காய்கறிகள், பழங்கள், பால், குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் பல பொருட்களை வைத்துக் கொள்ளலாம். உள்ளே வைக்கும் காய்கறிகள் பழங்கள் ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை மற்றும் உணவுப் பொருட்கள் ஒன்று முதல் இரண்டு நாட்கள் வரை கெடாமல் சுவை மாறாமல் இருக்கும்.

10 லிட்டர் குளிர்ந்த தண்ணீரை சேமிக்க முடியும். மருந்து பொருட்களும் பாதுகாப்பாக வைக்க முடியும். பராமரிப்பு செலவு இல்லை மின்சார குளிர்சாதன பெட்டியை விட பல மடங்கு ஆரோக்கியமானது. இதில் வைத்து சமைப்பதனால் உங்கள் உடல் ஆரோக்கியம் உயர்வடையும் என்கிறார் கனபதி.


நம்மூரில் விலை அதிகமாக இருப்பதால் மக்கள் வாங்க யோசித்து வருகிறார்கள் என தெரிவித்த அவர், ஆனாலும் தமிழ்நாடு, கேரளா மாநிலத்தில் தொடர்ந்து ஆடர்கள் வந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த குளிர்சாதன பெட்டியின் விலை ரூ.8,500 லிருந்து விற்பனை செய்து வருவதாகவும் , உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில் விலை குறைய வாய்ப்புள்ளது என்கிறார் கனகராஜ்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios