செல்போனில் பத்து எண்ணை அழுத்தினால் பத்து நிமிடத்தில் சரக்கு வீட்டுக்குகே வந்துவிடுவதாக சொல்லி ஆச்சர்யப்படுகிறார்கள் கொங்குமண்டலத்தை சேர்ந்தவர்கள். 

கோவை மாநகர பகுதிகளில் உள்ள 300க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் கடந்த ஒரு மாத காலமாக பூட்டிக்கிடக்கின்றன. இந்த கடைகளில் உள்ள சரக்குகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் போனதால், இவை எல்லாம் போலீஸ் பாதுகாப்புடன், பீளமேடு பகுதியில் உள்ள குடோனுக்கு மாற்றப்பட்டுவிட்டது. 

முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும், ஆளும்கட்சி விஐபி ஒருவர் தட்டி காயப்போடுகிறார். ஆன்லைனில் சரக்கு விற்கிறார். தனது சகாக்கள் மூலம் சில குறிப்பிட்ட செல்போன் எண் வாயிலாக புக்கிங் பெறுகிறார். ஆன்லைனில் பணம் செலுத்தப்பட்ட பின்னர், சரக்கு டோர் டெலிவரி செய்யப்படுகிறது. இருசக்கர வாகனத்தில்தான் சரக்கு பறக்கிறது. வழியில் சோதனை என்ற பெயரில் போலீசார் இடைமறித்தால், நொடியில் தடை தகர்ந்து விடுகிறது. சரக்கு வீடு தேடி டெலிவரி செய்யப்பட்டு விடுகிறது. 

இதில், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெற்றால், 125 ரூபாய் மதிப்புள்ள குவார்ட்டர் ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. டிமாண்ட்டுக்கு ஏற்ப, சரக்கு விலை விர்....ரென உயர்கிறது. டாஸ்மாக் கடைகள் பூட்டிக்கிடக்கும்போது, இவருக்கு மட்டும் எப்படி சரக்கு கிடைக்கிறது? என பலருக்கு சந்தேகம் வருகிறது. பீளமேடு குடோன் கைகொடுப்பதால் இவரது வண்டி தடையின்றி ஓடுகிறது. செல்போனில் பத்து எண்ணை அழுத்தினால் பத்து நிமிடத்தில் சரக்கு வீட்டுக்குகே வந்துவிடுவதாக சொல்கிறார்கள். என்ன? கொடுக்கும் விலைதான் கொஞ்சம் அதிகம்... அட அப்படி விலை கொடுத்து வாங்கவும் ஒரு கூட்டம் அலைகிறதே...