கோவையில் அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து ஏற்பட்ட விபத்தில் இடது காலை இழந்த பெண்ணணுக்கு அரசு வேலைக்கான ஆணையை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி கோவை அவினாசி சாலையில், ஆளுங்கட்சி கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவிற்காக வைக்கப்பட்ட பேனர் திடீரென்று சரிந்து விழுந்தது. தன் மீது விழாமல் இருப்பதற்காக அனுராதா பிரேக் பிடித்தார். அதில் வாகனம் சறுக்கி சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி அனுராதா கால் மீது ஏறி இறங்கியது. இதனையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேஸ்வரிக்கு இடது கால் அகற்றப்பட்டது.

இந்நிலையில், அந்த பெண்ணிற்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனிடையே, ராஜேஸ்வரின் கால் அகற்றப்பட்ட நிலையில், அவருக்கு, சங்கனூர் கிராமத்தில் கிராம உதவியாளராக பணியாற்ற பணி நியமன  ஆணையை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜாமணி ஆகியோர் அரசுவேலைக்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.