செல்போன்ல சீரியல் பார்த்துக்கிட்டே டூவீலர் ஓட்டிய வாலிபர்.. வைரலான வீடியோவால் போலீஸ் எடுத்த அதிரடி ஆக்ஷன்.!
இந்த வீடியோ பேஸ்புக், வாட்ஸ்அப்பில் வைரலானது. அந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் கண்ணப்பன் நகரை சேர்ந்த முத்துசாமி (35) என்பதும், தனியார் மசாலா நிறுவனத்தில் சூப்பர் வைசராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
கோவையில் செல்போனில் தொலைக்காட்சி தொடரான ராஜா ராணி சீரியலை பார்த்த படியே இருசக்கர வாகனத்தை இயக்கிய நபருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.
கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒருவர் வாகனத்தில் முன்பகுதியில் உள்ள ஸ்டாண்டில் செல்போனை வைத்திருந்தார். அதில், தொலைக்காட்சி தொடரான ராஜா ராணி - 2-வை ரசித்தபடியே வாகனத்தை இயக்கினார். இதனை பார்த்த மற்றொரு வாகன ஓட்டி அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார்.
இந்த வீடியோ பேஸ்புக், வாட்ஸ்அப்பில் வைரலானது. அந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் கண்ணப்பன் நகரை சேர்ந்த முத்துசாமி (35) என்பதும், தனியார் மசாலா நிறுவனத்தில் சூப்பர் வைசராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து, ஆபத்தான முறையில் வாகனம் இயக்குதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். வாகனத்தில் இருந்த வெல்போன் ஸ்டாண்ட்டை பறிமுதல் செய்தனர். மேலும், முத்துசாமிக்கு 1200 அபராதம் விதித்து எச்சரித்தனர்.