Asianet News TamilAsianet News Tamil

ஜவுளி துறையில் இந்தியாவை உலக மையமாக மாற்ற பிரதமர் உறுதி ஏற்றுள்ளார் - மத்திய அமைச்சர் தகவல்

குறைவான நீர், கழிவுகள் மேலாண்மை, தொழிலாளர்கள் நலன் என ஆரோக்கியமான ஜவுளி தொழிலை உருவாக்க அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்  என ஜவுளி, ரயில்வே மத்திய இணை அமைச்சர் தார்ஷனா வி. ஜர்தோஷ் வலியுறுத்தியுள்ளார்.

central minister Darshana Jardosh participate asia textile meet in coimbatore
Author
First Published Aug 31, 2023, 3:38 PM IST

கோவையில் முதல் முறையாக நடைபெறும் "ஆசிய ஜவுளி மாநாட்டில் மத்திய ஜவுளி மற்றும் இரயில்வேதுறை இணை அமைச்சர் தர்ஷனா வி.ஜர்தோஷ், கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், ஜவுளி தொழிலில் உள்ள சவால்கள், பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க நாட்டில் ஜவுளி துறையின் சங்கிலியை சார்ந்தோர் பங்கேற்றிருபோது மகிழ்ச்சி அளிக்கிறது.

central minister Darshana Jardosh participate asia textile meet in coimbatore

பல ஆண்டுகளாகவே ஆசியா ஜவுளி சந்தையில் முன்னணி வகிக்கிறது. இந்தியா, சீனா, வியட்நாம், வங்காளதேசம் ஆகிய நாடுகள் உலக அளவில் ஜவுளி தொழிலில் ஆசியா முண்ணனியாக இருப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளன. உலக அளவில் இந்தியா ஜவுளி உதிரிபாகங்கள் உற்பத்தியில் 2வது இடத்தையும்,  2வது அதிக ஸ்பிண்ட்லர்ஸ் உள்ள நாடாகவும் உள்ளது. மேக் இன் இந்தியா திட்டம் மூலம் ஜவுளி தொழிலில் உலக மையமாக இந்தியாவை மாற்ற பிரதமர் உறுதி ஏற்றுள்ளார். 

செப். 17 இல்ல, செப். 18 அரசு விடுமுறை; அரசாணை வெளியீடு

ஆடை நமது கலாசாரத்துடன் இணைந்தது மட்டுமின்றி பல ஆண்டுகள் ஆய்வின் மூலம் நமது நாட்டின் ஜவுளி உற்பத்தி தரம், நிரந்தரம், நிலையான சந்தையை அடைவதற்கு ஏற்றதாக மாறியுள்ளது. ஜவுளி தொழில் நாட்டில் 8% வணிக ரீதியான ஏற்றுமதி பங்கு மட்டுமின்றி 10 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்பை வழங்குகிறது.  

தாராபுரம் இந்தியன் வங்கி கிளையின் மேல் தளத்தில் தீ விபத்து; போராடி கட்டுப்படுத்திய வீரர்கள்

முன்னதாக, இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு மற்றும் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் இணைந்து நடத்தும் இந்த மாநாடு கோவையில் இரு நாட்கள் நடைபெறுகிறது. "ஆசியா 2015க்கு பிறகு ஜவுளி உற்பத்தி, நுகர்வோருக்கான உலகளாவிய மையம்" என்ற தலைப்பில்  மாநாடு கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறுகிறது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios