Coimbatore: மக்களின் திட்டமே எங்கள் பிரதமர் வேட்பாளர்; சிங்கை ராமசந்திரன் பதில்
கோவை தொகுதியில் களத்தில் உள்ள திமுக, பாஜக வேட்பாளர்கள் தற்போது வரை தொகுதிக்கென்று எந்த நலதிட்டத்தையும் செய்ததில்லை என அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிங்கை ராமச்சந்திரன் தெப்பக்குளம் மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மத்தியில் ஆளும் பாஜகவும், மாநிலத்தில் ஆளும் திமுகவும் இதுவரை எந்த திட்டங்களையும் கோவைக்கு செயல்படுத்தவில்லை.
குறிப்பாக தொழில் நகரமான கோவையில் மின்சார பிரச்சினை மற்றும் விசைத்தறி பிரச்சினைகள் குறித்து இரண்டு ஆட்சியாளர்களும் இதுவரை சரி செய்யப்படவில்லை. அதேபோல் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை கடந்த மூன்று ஆண்டுகளில் கரூர் மக்களுக்கும், கோவை மக்களுக்கும் எந்த திட்டங்களையும் செய்யவில்லை. தான் கோவையைச் சேர்ந்தவன், இதுவரை 25 ஆயிரம் குடும்பங்களுக்கு சேவைப் பணிகளை செய்துள்ளேன்.
உயிரே போனாலும் நீட் தேர்வு ரத்து கிடையாது; அண்ணாமலையின் பதிலால் கூட்டணியில் சலசலப்பு
திமுக சார்பில் போட்டியிட்ட கணபதி ராஜ்குமார் கோவை மாநகராட்சி மேயராக இருந்தவர். மக்களுக்கு இதுவரை என்ன செய்துள்ளார். நான் இப்போது செய்து கொண்டுள்ளதுபோல் எம்.பி தேர்தலில் வெற்றி பெற்று பல்வேறு திட்ட பணிகளை மேற்கொள்வேன். அண்ணாமலையுடன் நேருக்கு நேர் பேசுவதற்கு தயார். அவர் பயந்து கொண்டு வருவதில்லை.
மோடியின் ரோஷோவை பார்க்கும் போது இறுதி ஊர்வலம் தான் நியாபகத்திற்கு வருகிறது - சி.வி.சண்முகம் கிண்டல்
எங்களின் பிரதமர் வேட்பாளர் மக்களின் திட்டம் மட்டும் தான். மக்களுக்கு தேவையானதை நாங்கள் கொண்டு வந்து கொடுப்போம். யாருக்கு ஆதரவு தர வேண்டும் என அவசியம் இல்லை. பாஜக தேர்தல் வாக்குறுதி 500 நாட்களில் 100 வாக்குறுதி. இது 20 ஆயிரம் புத்தகம் இதுவரை படித்தேன் என்று சொன்னது போல தான் என தெரிவித்தார்.