MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கோயம்பத்தூர்
  • Coimbatore Top 5 Tourist Places: ஊட்டி, கொடைக்கானல் கூட்ட நெரிசலால் கவலையா? கோவையில் குளு குளுவென சுற்றிப்பார்க்க 5 சூப்பர் இடங்கள் இதோ!

Coimbatore Top 5 Tourist Places: ஊட்டி, கொடைக்கானல் கூட்ட நெரிசலால் கவலையா? கோவையில் குளு குளுவென சுற்றிப்பார்க்க 5 சூப்பர் இடங்கள் இதோ!

Coimbatore: கோடை விடுமுறையில் ஊட்டி போன்ற கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களுக்குப் பதிலாக, கோவை மாவட்டத்தில் பார்க்க வேண்டிய 5 முக்கிய சுற்றுலா தலங்கள் பற்றி பார்க்கலாம். 

2 Min read
Author : vinoth kumar
Published : May 03 2026, 12:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
கோவை மாவட்டத்தில் பார்க்க வேண்டிய இடங்கள்
Image Credit : Asianet News

கோவை மாவட்டத்தில் பார்க்க வேண்டிய இடங்கள்

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இதனால் வீடுகளில் ஃபேன், ஏசி எந்நேரமும் ஓடிக்கொண்டே இருக்கிறது. இதனிடையே கோடை விடுமுறையில் இருக்கும் பள்ளி மாணவர்கள் குளுமையான சுற்றுலா இடங்களுக்கு செல்லலாம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளனர். குளு குளுவென இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் முதலில் ஞாபகம் வருவது ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி, ஏற்காடு போன்ற இடங்கள் தான். ஆனால் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஊட்டி போன்ற இடங்களுக்கு செல்வதால் கூட்ட நெரிசலும் அதிகமாக காணப்படும். இதனால் அழகிய இடங்களை சுற்றிப்பார்க்க முடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே மக்கள் கூட்டம் அதிகளவு இல்லாத அழகிய இடங்கள் ஏராளமாக உள்ளது. குறிப்பா கோவை மாவட்டத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 சுற்றுலா தலங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். இதன் அருகிலேயே பிரபலமான ஊட்டி போன்ற மலைவாசஸ்தலங்கள் உள்ளது.

26
வெள்ளியங்கிரி மலை
Image Credit : our own

வெள்ளியங்கிரி மலை

வெள்ளையங்கிரி மலை - தென்னிந்தியாவின் "தென்கயிலாயம்" என்று போற்றப்படும் இந்த மலை, ஆன்மீகப் பயணிகளுக்கும் மலையேற்றப் பிரியர்களுக்கும் ஒரு சொர்க்கமாகும். கோவை பேருந்து நிலையத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது வெள்ளையங்கிரி மலை. வெள்ளையங்கிரி பயணம் என்பது கடல் மட்டத்திலிருந்து சுமார் 6000 அடி உயரத்தில் உள்ள ஏழு மலைகளைக் கடந்து செல்வதாகும். ஒவ்வொரு மலையும் ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தரும் சுயம்பு லிங்கம் வீற்றிருக்கும் சிகரம். இங்கு எப்போதும் பனிமூட்டமும், குளிர்ந்த காற்றும் வீசும். வரும் வழியிலேயே ஈஷா யோகா மையம் உள்ளது. வெள்ளையங்கிரி மலையில் பௌர்ணமிக்கு ஆண்கள் அதிகமாக வருவது வழக்கம்.

Related Articles

Related image1
ஊட்டியை விடுங்க.. கோவையில் கட்டாயம் பார்க்க வேண்டிய குளு குளுவென இருக்கும் 10 இடங்கள்!
Related image2
Nellai Top 10 Place: ஊட்டி, கொடைக்கானலை விட்டு தள்ளுங்க.. கோடை வெயிலில் நெல்லையில் பார்க்க வேண்டிய சூப்பரான 10 இடங்கள்
36
வால்பாறை சுற்றுலா
Image Credit : stockPhoto

வால்பாறை சுற்றுலா

தென்னிந்தியாவின் 'சிரபுஞ்சி' என்று அழைக்கப்படும் இந்த மலைப்பகுதி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு சொர்க்கமாகும். தேயிலைத் தோட்டங்கள், அடர்ந்த காடுகள் மற்றும் இதமான வானிலைக்காக இது புகழ்பெற்றது. கோவையில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. வால்பாறை செல்லும் வழியில் அதிர்ஷ்டம் இருந்தால் வரையாடுகள், யானைகள், சிங்கவால் குரங்குகள் மற்றும் சிறுத்தைகளைக் காண வாய்ப்புள்ளது. அழகான அழியானு அணை மற்றும் சுற்றுலா படகு சவாரி போன்றவை உள்ளது. பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் சாலையில் மொத்தம் 40 ஊசிமுனை வளைவுகள் உள்ளன. ஒவ்வொரு வளைவிலும் நிலவும் இயற்கை அழகு உங்கள் பயணத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றும்.

46
காரமடை கோயில்
Image Credit : Asianet News

காரமடை கோயில்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான மற்றும் பழமையான வைணவத் தலங்களில் ஒன்று காரமடை ரங்கநாதர் கோயில். 'கொங்கு நாட்டுத் திருவரங்கம்' என்று அழைக்கப்படும். கோயம்புத்தூரிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கொங்கு மண்டலத்திற்கு முக்கிய ஆறாக இருப்பது பாவானி ஆறு, இந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த கிராமம். இயற்கையோடு அமைதியும் கலந்திருக்கும் கிராமத்தில் பிரசிதிபெற்ற அரங்கநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சாகசத்தை விரும்புவோருக்கு, மலையேற்ற தளங்கள் செல்பவர்களுக்கு பிடித்த இடமாக உள்ளது.

56
டாப்ஸ்லிப் அழகிய வனப்பகுதி
Image Credit : Asianet News

டாப்ஸ்லிப் அழகிய வனப்பகுதி

கோயம்புத்தூரிலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டாப்ஸ்லிப். ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குள் அமைந்துள்ளது. டாப்ஸ்லிப் கண்காணிப்பு கோபுரம், சுற்றியுள்ள காடுகளின் அற்புதமான காட்சிகளைக் கொண்டுள்ளது. வங்காளப் புலிகள், யானைகள், காட்டெருமைகள் எளிதாக பார்க்கலாம். யானை சவாரி செய்யும் வசதியும் உண்டு. மேலும் இங்கிருந்து கொஞ்ச தூரத்தில் பரம்பிக்குளம் அணை உள்ளது. வரும் வழியில் ஆழியார் நீர்த்தேக்கமும் மூங்கில் தேக்கு மரங்களும் சுற்றுலா வாசிகளை வரவேற்கும்.

66
சிறுவாணி நீர்வீழ்ச்சி மற்றும் அணை
Image Credit : Asianet News

சிறுவாணி நீர்வீழ்ச்சி மற்றும் அணை

கோயம்புத்தூரில் இருந்து மேற்கே 40 கி.மீ தூரத்தில் உள்ளது சிறுவாணி. அடர்ந்த காடுகள் மற்றும் பாறை நிலப்பரப்புகளால் சூழப்பட்டுள்ளது. உலகிலேயே இரண்டாவது சுவையான நீர் சிறுவானி. கோவையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த நீர் கேரள – தமிழக எல்லையில் பல்வேறு நீரோடைகள் வாயிலாக வந்து சிறுவாணி அணையில் வந்து சேர்கிறது. சிறுவாணி நதியில் நீர் பாய்ந்தோடும் அழகு ரம்மியமானது. மழைக்காலங்களில், அதிக அளவு தண்ணீர் கொட்டும், இது ஒரு அற்புதமான காட்சியாக இருக்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கோயம்புத்தூர்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஊட்டியை விடுங்க.. கோவையில் கட்டாயம் பார்க்க வேண்டிய குளு குளுவென இருக்கும் 10 இடங்கள்!
Recommended image2
கோவை மட்டுமல்ல.. இந்த மூன்று மாவட்டங்களில் விடாமல் கொட்டப்போகும் கனமழை.!
Recommended image3
அரசு பேருந்தில் இளம்பெண்ணை மடியில் உட்கார வைத்து! கண்ட இடத்தில் கை வைத்து எல்லை மீறல்! தலையில் அடித்துக்கொண்ட பயணிகள்!
Related Stories
Recommended image1
ஊட்டியை விடுங்க.. கோவையில் கட்டாயம் பார்க்க வேண்டிய குளு குளுவென இருக்கும் 10 இடங்கள்!
Recommended image2
Nellai Top 10 Place: ஊட்டி, கொடைக்கானலை விட்டு தள்ளுங்க.. கோடை வெயிலில் நெல்லையில் பார்க்க வேண்டிய சூப்பரான 10 இடங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved