Asianet News TamilAsianet News Tamil

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..! மீண்டும் உச்சத்தை தொட்ட வெங்காய விலை..!

கிலோ வெங்காயம் கோவை சந்தையில் 130 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தாறுமாறாக உயர தொடங்கியுள்ளது. ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 170 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது.

again onion price increased
Author
Tamil Nadu, First Published Dec 19, 2019, 11:50 AM IST

கடந்த சில வாரங்களாக வெங்காய விலை நாடு முழுவதும் தாறுமாறாக உயர்ந்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். ஏழைகள் மற்றும் நடுத்தரவர்க்கத்தினர் சமையலுக்கு வெங்காயத்தை பயன்படுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டனர். வெங்காய விலை உயர்வால் உணவகங்களில் வெங்காயத்தை உபயோகப்படுத்துவதை உரிமையாளர்கள் தவிர்த்து வந்தனர்.

again onion price increased

இதனிடையே வெங்காய தட்டுப்பாட்டை போக்க எகிப்து நாட்டில் இருந்து தமிழகத்தில் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. அதன்பிறகு வெங்காய விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. கோவையிலும் வெளிநாட்டு வெங்காயங்கள் இறக்குமதியாகின. எனினும் மக்கள் அதை வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை.  கோவையில் இருக்கும் எம்.ஜி.ஆர் மார்கெட்டிற்கு வழக்கமாக கர்நாடக, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் 300 டன் வெங்காயம் வரும்.

again onion price increased

கிலோ வெங்காயம் கோவை சந்தையில் 130 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தாறுமாறாக உயர தொடங்கியுள்ளது. ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 170 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது. பலமணி நேரம் பயணத்தில் கொண்டுவரப்படும் வெங்காயம் கோவை வருவதற்குள் அழுகி விடுவதால் வியாபாரிகள் வெங்காயத்தை இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் வெங்காய வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது.

again onion price increased

இன்னும் ஒரு மாதத்திற்கு விலை உயர்வு நீடிக்கும் என்றும் ஜனவரியில் அண்டை மாநிலங்களில் வெங்காய அறுவடை நடத்த பிறகு தான் விலை குறையும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சின்ன வெங்காயத்தின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் விலை 160 ரூபாய் வரை விறக்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios