குஜராத்திற்கு அப்பறம் நம்ம தான் ஜவுளித்துறையில் முன்னோடி… அமைச்சர் ஆர்.காந்தி பெருமிதம்!!
பருத்தி இறக்குமதிக்கான வரியை முற்றிலும் ரத்து செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.
பருத்தி இறக்குமதிக்கான வரியை முற்றிலும் ரத்து செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சிக்கு வந்து 1 வருடம் அரை ஆண்டுகள் ஆகியுள்ளது. ஆனால் ஜவுளித்துறையில் பல முன்னெற்றம் கொண்டு வந்துள்ளோம். என்னிடம் கேட்பதைவிட ஜவுளித்துறையிடம் கேட்டுபாருங்கள். டெக்ஸ்டைல் தனியாக ஆணையர், ஜவுளித்துறைக்கு தனியாக ஆணையர் போடப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறோம். சேலத்தில் 119 ஏக்கரில் யூனிட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: கால்பந்து வீராங்கனைக்கு தவறான சிகிச்சை... நடவடிக்கை உறுதி... மா.சுப்ரமணியன் அதிரடி!!
ஜவுளித்துறை முன்னெற்றத்திற்கான அறிவுப்புகளை சும்மா அறிவிக்க விரும்புவதில்லை. இது திமுக ஆட்சியில்ல, இது மக்கள் ஆட்சி என முதல்வர் ஆட்சி பொறுப்பு ஏற்கும் போது தெரிவித்தார். அதன் படி தான் ஆட்சி நடைபெற்று வருகிறது. குஜராத்திற்கு அப்பறம் நாம் தான் ஜவுளித்துறையில் முன்னோடியாக இருக்கிறோம். பருத்தி சாகுபடி வேளாண்துறை உடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். அதிகாரிகளை ஒருங்கிணைத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
இதையும் படிங்க: மழையால் தாமதமான திருமணம்… கோயிலில் தேங்கிய நீரில் நனைந்த தம்பதிகள்… நீரை அகற்ற வேண்டுகோள்!!
முதல்வரின் ஆணைப்படி இந்தியாவிலே அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்மாதிரியாக இருக்க இரவும் பகலுமாக உழைத்து வருகிறோம் என்றார். பருத்தி சாகுபடியை பொறுத்தவரையில் தனி கவனம் செலுத்தி வருகிறோம். பருத்தி இறக்குமதி வரியை முற்றிலும் பெற்றிட தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார். முன்னதாக கோயம்புத்தூர், அவினாசி சாலை, SITRA (The South India Textile Research Association) கூட்டரங்கத்தில் 60th Joint Technological Conference நிகழ்ச்சியினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தார்.